வளைகுடாப் போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது
ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று குவைத் நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளிலும் போர் நடந்தது. குவைத் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் தன் நாட்டுப் படைகளை சவுதி அரேபியாவில் நிறுத்தி மற்ற நாட்டுகளும் தங்களது படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பல நாடுகளும் அமெரிக்காத் தலைமையிலானக் கூட்டுப் படையில் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளேப் பெரும் பங்கு வகித்தன. மொத்தச் செலவான 60 பில்லியன் அமெரிக்க டாலரில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவுதி அரேபியா செலுத்தியது இந்தப் போரில் வான்வழித் தாக்குதல் 17 சனவரி 1991 அன்றும் தொடர்ந்து தரைவழித் தாக்குதல் 23 பிப்ரவரி 1991 அன்றும் தொடங்கியது.
குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஈராக்கின் குவைத், சவுதி அரேபிய எல்லை பகுதிகளில் வான்வழி மற்றும் தரை போர் நடவடிக்கைகள் தீவிரமாக நிகழ்ந்தது.இதற்குப் பதிலடியாக ஈராக் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு பகுதியில் இருந்த கூட்டணி இராணுவ முகாம்களை நோக்கி விரைவு ஏவுகணைகளை அனுப்பியது. ஏப்ரல் 1991 ல் இயற்றப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 687 தீர்மானத்தின் படி போர்நிறுத்த உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கிய போர் வெடித்தது.
அமெரிக்க செய்தி தொலைகாட்சியான சிஎன்என் இப்போரின் முக்கிய நிகழ்வுகளை போர் நடக்கும் இடங்களுக்கே சென்று நேரடி ஒளிபரப்பு செய்தது.இது அக்காலத்தில் முதல் முயற்சியாகும்.இப்போர் முடிவடைந்த பின்னர் டெசர்ட் ஸ்ட்ரோம் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு ஒரு கன்னி விளையாட்டு உருவாக்கப்பட்டது.இதனால் இப்போர் காணொளி விளையாட்டுப் போர் (video game war) என அழைக்கபடுகிறது
Remove ads
யுத்த காலகட்ட பரவல்
அமெரிக்க தாக்குதல் 3 முக்கிய பரவல்களை கொண்டிருந்தது.அவை
- 2 ஆகஸ்ட் 1990 முதல் , 1991 ஜனவரி 16 வரை சவுதி அரேபியா பாதுகாப்பு
- 1991 ஜனவரி 17 முதல் , 1991 ஏப்ரல் 11 வரையான காலகட்டத்தில் குவைத் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விடுதலை
- 1991 ஏப்ரல் 12 முதல் 1995 நவம்பர் 30 வரை தென்மேற்கு ஆசிய போர்நிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டு அமைதி நிலைநிறுத்தப்பட்டது.
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads