கிர்நார் சமணக் கோயில்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிர்நார் சமணக் கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு கிழக்கில் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிர்நார் எனும் ரைவத மலையில் கடல் மட்டத்திலிருந்து 2370 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16 கோயில்கள் கொண்ட இம்மலைக்கோயில்களுக்குச் செல்ல 3800 படிக்கட்டுகள் உள்ளது. இக்கோயில்கள் பளிங்கு கற்களால் நிறுவப்பட்டது.[1][2] இந்த சமணத்தின் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் பிரிவினர்களுக்கு பொதுவானது.


24 தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான அரிஷ்டநேமி எனப்படும் நேமிநாதர் கிர்நார் மலையில் முக்தி அடைந்ததார். இக்கோயில் நேமிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். நேமிநாதர் கோயில் செவ்வக வடிவத்தில் 195 x 130 அடி நீள, அகலம் கொண்டது. [1][2] சாளுக்கியப் பேரரசர் செயசிம்ம சித்தராசன் (ஆட்சி:1092 – 1142) ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரா பிரதேச ஆளுநராக இருந்த சஜ்ஜனா என்பவர் இக்கோயில்களை மறுசீரமைத்து நிறுவினார்.[3][4]இக்கோயில்களில் நேமிநாதர் கோயில் கருவறையில் கருங்கல்லால் நேமிநாதரின் சிற்பம், உள்ளங்கையில் சங்கு ஏந்தி அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது.[1][2]
Remove ads
பிற முக்கியக் கோயில்கள்
- ஆதிநாதர் கோயில்
- ஐந்து கொடுமுடிகள் கொண்ட பஞ்ச மேரு கோயில் 1859ம் ஆண்டில் கட்டப்பட்டது.[5]
- குமாரபாலரின் கோயில்
- வாஸ்துபால விகாரை
- சம்பிரதி ராஜா கோயில்
- அம்பிகா மாதா கோயில்
- சௌமுகி கோயில்
படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads