குஜராத்தில் சமணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குஜராத்தில் சமணம் பல நூற்றாண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கை செலுத்தி வருகிறது.[1]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குஜராத் மாநிலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 5,79,654 ஆக உள்ளது. [2]சமணர்கள் தங்களின் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாதர், இம்மாநிலத்தின் கிர்நார் மலையில் மோட்சம் அடைந்தார் எனக்கருதுகிறார்கள்.
கிபி ஐந்தாம் நூற்றாண்டில், சமண சமயத்தின் தலைநகரம் எனப்போற்றப்படும் பண்டைய வல்லபி நகரத்தில் சமண அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது.[3] சௌதா வம்ச மன்னர் வனராஜா ஆட்சியின் போது (கிபி 720-780), வல்லபி நகரத்தில் சமணத் துறவி சிலாகுணா சூரி தலைமையில் கூடிய துறவிகள், சமண சமயத்தின் ஒழுங்கு முறைப்பட்ட சாத்திரங்கள் தொகுக்கப்பட்டன.
Remove ads
வரலாறு
குஜராத் மாநிலம் கி பி 6-7ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணக் கோயில்கள் கொண்டிருந்தது. இக்கோயில்கள் சோலாங்கிப் பேரரசர்கள் மற்றும் இராசபுத்திர சௌதா வம்சத்தவர்கள் பேணிக்காத்தனர்.[4] 13-ஆம் நூற்றாண்டில் வடக்கு குஜராத் பகுதிகள், சமண சமயத்தின் முக்கிய மையமாக விளங்கியது.[5]
முதன் முதலில் குஜராத்தில் அறியப் பட்ட இலக்கியமான பரதன் – பாகுபலி இராஜா எனும் சரித்திர வரலாற்று நூலை எழுதியது ஒரு சமணத் துறவி ஆவார். குஜராத் சமண வரலாற்றில் ஆச்சாரியர் ஹேமசந்திர சூரி மற்றும் அவர் மாணவர் சோலாங்கிப் பேரரசர் குமாரபாலன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
Remove ads
முக்கிய சமண மையங்கள்
குறிப்பிடத்தக்க சமணர்கள்
- விக்கிரம் சாராபாய்
- பிரேம்சந்த் ராய்சந்த்
- அமித் ஷா
- திலீப் தோஷி
- கௌதம் அதானி
- விஜய் ருபானி
- விர்ஜி வோரா
- ஆஷா பரீக்
- திலீப் சாங்வி
- கல்யாண்ஜி-ஆனந்த்ஜி
- சுதிர் வி. ஷா
சமணக் கோயில்கள்
- வசாய் ஜெயின் கோயில், பத்ரேஸ்வர்
- சோமொவ்சரண் கோயில்
- கிர்நார் ஜெயின் கோயில்கள்
- அதலஜ் ஜெயின் கோயில்
- மகூடி ஜெயின் கோயில்
- சாந்திநாதர் ஜெயின் கோயில், கோத்தரா, கட்ச் மாவட்டம்
- 72 ஜெயின் கோயில்கள்
- பவகாத் மலை ஜெயின் கோயில்
- கீர்த்தி தூண், பாலன்பூர்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads