கிலுகாமிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கில்கமெஷ் (Gilgamesh)[2] பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியமான உரூக் நகர மன்னர்களில் ஒருவர்.
கிமு மூவாயிரம் ஆண்டில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட பண்டைய சுமேரியக் காவியமான கில்கமெஷ் காப்பியத்தில் வீரமிக்க கதாநாயகனாக கில்கமெஷ் சித்தரிக்கரிப்படுகிறார்.
கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் உரூக் நகரத்தை ஆட்சி செய்த கில்கமெசின் வீரம், வெற்றி, புகழைப் போற்றி தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[3]மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது, கிமு 2,000ல் கில்கமெஷ் காப்பியம் படைத்தனர்.
கில்கமெஷ், கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் சுமேரியாவின் உரூக் நகரத்தை ஆண்ட மன்னர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4][5][6][7] [4][5]
உரூக் நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட கட்டிட செய்யுள் குறிப்புகளில், 11 - 15 வரிசை குறிப்புகளில் மன்னர் கில்கமெஷ் குறித்த செய்திகள் உள்ளது. [8]
கில்கமேஷின் சமகாலத்தில் வாழ்ந்த கிஷ் நகர இராச்சியத்தின் மன்னர் எம்மெபாராஜெசி என்பவர், கில்கமெசை ஒரு மன்னராக குறிப்பிடுகிறார். [9]
சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்கமேஷ் உரூக் நகர இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த மன்னர் கில்கமெஷை உரூக் நகரத்தின் ஆற்றின் கரையில் புதைப்பதற்காக, யூப்பிரடீஸ் ஆற்றின் நீர்ப்போக்கை மாற்றி அமைத்ததாக, தற்கால டெல் ஹத்தாத் (Tell Haddad]]) தொல்லியல் களத்தில் கிடைத்த ஒரு காப்பிய நூலின் துண்டுகளிலிருந்து செய்திகள் அறியப்படுகிறது. [9] [10][9] கில்கமெஷ் வீரதீர செயல்களை கூறும் கில்கமெஷ் காப்பியம் கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது.
Remove ads
கில்கமெஷ் காப்பியம்
பழைய பாபிலோனிய இராச்சியத்தின் சுடுமண் பலகைகயின்,[11], மன்னர் கில்கமெஷ் எதிரியும், பின்னர் நண்பருமான என்கிடு [12]
பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுடுமட் சிற்பம் எண் 5-இல் (கிமு 2250 - 1900), கில்கமெஷ் சொர்க்கத்தின் காளையை வெட்டுதல், [13], கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு குறிப்பு [12][14]

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads