கிஷ், சுமேரியா

From Wikipedia, the free encyclopedia

கிஷ், சுமேரியா
Remove ads

கிஷ் (Kish ) (சுமேரியம்: Kiš; transliteration: Kiški; cuneiform: 𒆧𒆠;[1] அக்காதியம்: kiššatu[2]) தற்கால ஈராக் நாட்டின் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் பண்டைய சுமேரியாவின் கிமு 3,100 காலத்திய நகரம் ஆகும்.[3] இந்நகரத்தில் தோன்றிய கிஷ் பண்பாடு லெவண்ட் பிரதேசத்தின் எப்லா இராச்சியம் மற்றும் மாரி இராச்சியங்களில் பரவியது. இப்பண்டைய நகரம் தற்போது தொல்லியல் களமாக, பாபிலோனின் கிழக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், பாக்தாத் நகரத்திலிருந்து தெற்கில் 80 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[4]

விரைவான உண்மைகள் கிஷ், இருப்பிடம் ...
Thumb
பண்டைய சுமேரியவின் கிஷ் நகரத்தின் சிதிலங்கள், ஈராக்
Remove ads

வரலாறு

Thumb
சுமேரியாவின் பண்டைய நகரங்கள்

செம்தேத் நசிர் காலத்தில் நடு மெசொப்பத்தோமியாவில் செம்தேத் நசிர் (கிமு 3100) மற்றும் கிஷ் நகரம் செல்வச் செழிப்புடன் விளங்கியது.

சுமேரிய மன்னர்களின் முதல் நகரமாக கிஷ் நகரம் விளங்கியது.[5] துவக்க கால கிழக்கு செமித்திய மொழிகளின் தாயகமாக கிஷ் நகரம் விளங்கியது.[6] கிஷ் இராச்சியத்தின் 21வது மன்னர் என்மெபரகேசி என்பவர், ஈலாம் இராச்சியத்தின் போர்க்கருவிகளை கைப்பற்றினார் என்பதை தொல்லியல் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. கிஷ் நகரம் அழியும் வரை, பழைய பாபிலோனியப் பேரரசு, காசிட்டு மக்கள், புது அசிரியப் பேரரசு, புது பாபிலோனியப் பேரரசு மற்றும் செலூக்கியப் பேரரசு காலத்தில் செழித்திருந்தது.

Remove ads

தொல்லியல்

யூப்பிரடீஸ் ஆற்றின் கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கிஷ் நகரத் தொல்லியல் களம், ஏறத்தாழ ஒரு முட்டை வடிவத்தில் நாற்பது தொல்லியல் மேடுகளைக் கொண்டது. அவைகளில் புகழ்பெற்ற மேடுகள் பின்வருமாறு:

  • டெல் உகய்மிர் தொல்லியல் களம் - கிஷ் நகரத்தின் மையப் பகுதி என கருதப்படுகிறது. கிஷ் என்பதற்கு சிவப்பு எனப்பொருள். சிவப்பு நிற செங்கற்களாலான சிதிலமடைந்த கட்டிடங்கள் இங்குள்ளது.
  • இங்கரா தொல்லியல் களம் -:கிஷ் நகரத்தின் கிழக்கே அமைந்தது. இங்கு கிஷ் நகர மக்கள் வழிபட்ட இனான்னாவின் கோயில் உள்ளது.[7]
  • எல்-பெண்டர் தொல்லியல் களம்: பார்த்தியப் பேரரசின் தொல்பொருட்கள் கொண்டுள்ளது.
  • தொல்லியல் மேடு W - புது அசிரியப் பேரரசின் ஆப்பெழுத்தில் எழுத்தப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டது.

கிஷ் நகரத்தின் உகய்மிர் தொல்லியல் களத்தை 1912 மற்றும் 1914களில் பிரான்சு நாட்டு தொல்லியல் ஆய்வாளர் அகழ்வாய்வு செய்து, பழைய பாபிலோனிய இராச்சியத்தின் 1,400 தொல்பொருட்களை கண்டுபிடித்தார். அவைகளின் முக்கியமானவைகள் இஸ்தான்புல் மற்றும் லூவர் நகர அருங்காட்சியகங்களில் உள்ளது.[8][9]

பின்னர் 1923 முதல் 1933 முடிய கிஷ் நகர தொல்லியல் களங்களில் கண்டெடுத்த தொல்பொருட்கள் சிகாகோ மற்றும் ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகங்கள் வைக்கப்பட்டுள்ளது.[10] [11] [12] [13] [14] [15] [16]

1988, 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இத்தொல்லியல் களத்தை சப்பானியர்கள் அகழ்வாய்வு செய்தனர்.[17] [18][19]

Remove ads

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads