கிளாந்தான் ஆறு
மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் ஒரு முக்கியமான ஆறு From Wikipedia, the free encyclopedia
Remove ads

கிளாந்தான் ஆறு என்பது (மலாய்: Sungai Kelantan; ஆங்கிலம்: Kelantan River; கிளாந்தான் மலாய் மொழி: Sunga Kelate;) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஆறு. [1]
இந்த ஆறு தாமான் நெகாரா தேசிய பூங்காவின் (Taman Negara National Park) வடகிழக்கு பகுதியில் சுமார் 11,900 கி.மீ². நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது. தன் இறுதிப் பயணத்தில் தென் சீனக் கடலில் கலக்கிறது.[2]
Remove ads
வழிப் பாதை
ஓராங் அஸ்லி பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் தெற்கு கிளாந்தானில் உள்ள குவா மூசாங் மாவட்டப் பகுதியின் மலைக்காடுகளில் கிளாந்தான் ஆறு தொடங்குகிறது.
இந்தப் பகுதி அதன் சுண்ணாம்புக் குன்றுகள் மற்றும் சுண்ணாம்புக் குகைகளுக்கு பெயர் பெற்றது. நெங்கேரி ஆற்றின் (River Nenggeri) வழிப்பாதையில் சில குகைகள் உள்ளன. குவா சா (Gua Cha) போன்ற குகைகள். 9000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
இந்த ஆறு ஏழு முக்கிய நகரங்களைக் கடந்து ஆறு கடலில் பாய்கிறது: கோலா கிராய், தானா மேரா மாவட்டம், மாச்சாங், பாசீர் மாஸ், தும்பாட், கோத்தா பாரு, பெங்காலான் செப்பா. ஆற்றின் முகத்துவாரத்தில் பல தீவுகள் உள்ளன.
கோலா பெசார்
கோலா பெசார் என்று அழைக்கப்படும் முகத்துவாரத்தைச் சுற்றிலும் ஏராளமான மீனவக் கிராமங்கள் உள்ளன. பிரபலமான பாத்தேக் தயாரிப்பிற்கு நன்கு அறியப்பட்ட கிராமங்கள்.
1941 டிசம்பர் மாதம், மலாயா மீதான ஜப்பானியப் படையெடுப்பு நடந்தது. அப்போது ஜப்பானியத் துருப்புக்கள் முதன்முதலில் இங்குதான் தரையிறங்கினர்.
Remove ads
வெள்ளப் பாதிப்புகள்
வடகிழக்கு பருவமழை பருவத்தின் காரணமாக, நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் கிளாந்தான் ஆறு வழக்கமாக அதன் கரைகளில் அதிகமாகப் பெருக்கெடுக்கும். 1926 மற்றும் 1967ஆம்- ஆண்டுகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
1967-ஆம் ஆண்டு வெள்ளத்தில் 84% கிளாந்தான் மக்கள் (537,000 மக்கள்) மோசமாகப் பாதிக்கப்பட்டனர். சுமார் 125,000 பேர் வெளியேற்றப்பட்டனர். மற்றும் 38 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.[3]
தொலைவுக் கணிப்பியல் வெள்ள முன்னறிவிப்பு
கிளாந்தான் ஆற்றுப் படுகையில், மிக அண்மைய காலத்தில், தொலைவுக் கணிப்பியல் வெள்ள முன்னறிவிப்பு (Telemetric Flood Forecasting System) அமைப்பு நிறுவப்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் அதிகமாகும் போது பொதுமக்கள் எச்சரிக்கப் படுகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads