கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி
ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி அல்லது கிளாந்தான் மலாய் மொழி (ஆங்கிலம்: Kelantan-Pattani Malay Language; மலாய்: Bahasa Melayu Kelantan/Patani; தாய்: ภาษายาวี; ஜாவி: بهاس ملايو ڤطاني; கிளாந்தான் மலாய்: Baso Kelate) என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.[3]
கிளாந்தான் மொழி என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்த மொழி, மலேசிய மாநிலமான கிளாந்தான்; மற்றும் தாய்லாந்து நாட்டின் தெற்கு மாநிலங்களில் பேசப்படுகிறது.[4]
இந்த மொழி தாய்லாந்து நாட்டில் வாழும் மலாய்க்காரர்களின் முதன்மையான பேச்சு மொழியாகும். ஆனாலும் தெற்கு தாய்லாந்து கிராமப் புறங்களில் வாழும் மக்களும் தாய்லாந்து சாம் சாம் (Sam-Sam) இன மக்களும் தங்கள் மொழிகளில் ஒன்றாகப் (lingua franca) பயன்படுத்தப் படுகிறார்கள்.
Remove ads
பொது
கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப் பட்டதால் மற்ற மலாய் மொழி வகைகளில் இருந்து மிகவும் வேறுபட்டு உள்ளது. தவிர, இந்த மொழி, தீபகற்ப மலேசியாவின் மற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் வட்டாரப் பேச்சு மொழிகளில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது.
கெடா மலாய் மொழி, பகாங் மலாய் மொழி, மற்றும் திராங்கானு மலாய் மொழி ஆகியவற்றில் இருந்து வேறுபட்டது என்று சொல்லலாம். ஆனாலும் அந்த வட்டார மொழிகள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியுடன் (Kelantanese-Pattani Malay language) மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவை.[5]
Remove ads
அழைப்புப் பெயர்கள்
கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி, (தாய்லாந்து மொழியில்: ภาษายาวี) (பாசா யாவி) என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. மேலும் (தாய்: ภาษามลายูปัตตานี) (மலாயு பட்டாணி) என்றும் குறிப்பிடப்படுகிறது.
கிளாந்தான் மாநிலம் தீபகற்ப மலேசியாவில் இருந்து மலைக் காடுகள் நிறைந்த இடத்தில் தனித்து விடப்பட்ட மாநிலம். அதே போலத்தான் தாய்லாந்து நாட்டின் பட்டாணி மாநிலமும். அதனால் வழக்கமான மலாய் மொழியில் இருந்து அங்கு வாழ்ந்த மக்களின் மலாய் மொழியில் தனித்துப் போய் விட்டது.[6]
கிளாந்தான் மலாய் மொழி
இப்போதும்கூட தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் இருந்து அங்கு போகும் மலேசியர்களுக்கு கிளாந்தான் மக்கள் பேசும் மலாய் மொழி புரியாத மொழி போல இருக்கும். 100 சொற்களில் 50 சொற்களே சாதாரண மலேசியர்களுக்குப் புரியும் சொற்களாக இருக்கும்.
கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி, தாய்லாந்தில் உள்ள பட்டாணி பகுதியில் பகாசா பட்டாணி என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
பட்டாணி இராச்சியம்
1400-ஆம் ஆண்டுகளில், தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி இராச்சியம் (ஆங்கிலம்: Sultanate of Patani; ஜாவி: كسلطانن ڤطاني) எனும் ஒரு சுல்தானகம் இருந்தது. இந்தச் சுல்தானகம் இப்போதைய தாய்லாந்து மாநிலங்களான பட்டாணி (Pattani), யாலா (Yala), நாராதிவாட் (Narathiwat); மற்றும் வடக்கு மலேசியாவின் பத்து குராவ்; கிரிக், பெங்காலான் உலு, லெங்கோங். சிக் மாவட்டம், பாலிங், பாடாங் தெராப் மாவட்டம் ஆகிய நிலப் பகுதிகளை உள்ளடக்கியது.[7]
இந்த இராச்சியத்தின் ஒரு பகுதி ரெமான் இராச்சியம் (Kingdom of Reman). இந்த இரு அரசுகளின் மொழியும் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியாகும். ரெமான் இராச்சியம் 1902-ஆம் ஆண்டில் சயாமியர்களால் முடக்கப்பட்டது.[8]
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads