கிழக்கும் மேற்கும்
மு. களஞ்சியம் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கும் மேற்கும் 1998 ஆம் ஆண்டு நெப்போலியன், நாசர், தேவயானி மற்றும் கீதா நடிப்பில், மு. களஞ்சியம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].
Remove ads
கதைச்சுருக்கம்
சூர்யமூர்த்தியின் (நெப்போலியன்) சகோதரி தில்லை (கீதா). அவர்களது தந்தையின் இரண்டாவது மனைவி சின்னம்மா (தேனி குஞ்சரம்மாள்) சிறுவயதிலேயே அவர்களை வீட்டைவிட்டு துரத்திவிடுகிறார். இருவரும் சிரமப்பட்டு முன்னேறுகின்றனர்.
கீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறான் சூர்யமூர்த்தி. பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் (நாசர்) என்பவனுக்குத் திருமணம் செய்ய விரும்பி அவனைப்பற்றி விசாரிக்கும்போது அனைவரும் அவனை நல்லவன் என்று பொய் சொல்கின்றனர். அதை நம்பி கீதாவைக் காத்தலிங்கத்திற்கே மணம் முடிக்கிறான் சூர்யமூர்த்தி. திருமணத்திற்கு பிறகு காத்தலிங்கம் மது அருந்துபவன் என்பதும், அக்கிராமத்திலுள்ள வள்ளி (விசித்திரா) என்ற பெண்ணுடன் அவனுக்குள்ள தொடர்பும் தெரிகிறது.
காத்தலிங்கத்தின் தங்கை மல்லிகாவும் (தேவயானி) சூர்யமூர்த்தியும் காதலிக்கின்றனர். தில்லை இதனால் பிரச்சனை உருவாகும் என்று சூர்யமூர்த்தியை எச்சரிக்கிறாள். ஒரு இக்கட்டான சூழலில் சூர்யமூர்த்தியைத் தவறாகப் புரிந்துகொள்ளும் மல்லிகா அவனை வெறுக்கிறாள். காத்தலிங்கம், மல்லிகாவிற்கு வேறொரு மாப்பிளையுடன் ஏற்பாடு செய்த திருமணம் நின்றுபோகிறது. அதற்கு மல்லிகா- சூர்யமூர்த்தியின் காதல்தான் காரணம் என்று மாப்பிள்ளைவீட்டார் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரப்படும் காத்தலிங்கம், சூர்யமூர்த்தியின் முன் தில்லையை அடிக்கிறான். இதைத் தடுக்க முயலும் சூர்யமூர்த்தி ஒரு கட்டத்தில் காத்தலிங்கத்தை அடித்து விடுகிறான். காத்தலிங்கம் தில்லையை விட்டு வள்ளியுடன் வாழ முடிவுசெய்கிறான். அதன்பின் நடந்தது என்னவென்பது மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
- நெப்போலியன் - சூர்யமூர்த்தி
- நாசர் - காத்தலிங்கம்
- தேவயானி - மல்லிகா
- கீதா - தில்லை
- மணிவண்ணன்
- தலைவாசல் விஜய் - கணேசன்
- விசித்ரா - வள்ளி
- தேனி குஞ்சரம்மாள் - சின்னம்மா
- களஞ்சியம் - முத்துக்குமார்
- சாப்ளின் பாலு - சின்னராசு
- மீண்டும் சுந்தர்
- தேவகி
- தமிழ்செல்வி
- ராதாஸ்ரீ
- பத்மா
விருதுகள்
1998 தமிழக அரசு திரைப்பட விருதுகள்[3]
- பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருது
- தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது - அறிவுமதி
இசை
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் அறிவுமதி, பழனிபாரதி மற்றும் வாசன்[4][5][6].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads