தேவயானி (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

தேவயானி (நடிகை)
Remove ads

தேவயானி (ஆங்கிலம்: Devayani, பிறப்பு: 22 சூன் 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான இலட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம் பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாண்ஸ்டாப் கூரியரின் "இனிமே இதுதான் இது மட்டும்தான்" எனும் விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்.

விரைவான உண்மைகள் தேவயானி, பிறப்பு ...
Remove ads

திருமணம் வாழ்க்கை

தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.[1] இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[2]

திரைப்பட வரலாறு

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

2000 முதல் 2013 வரை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

வங்காளம் திரைப்படம்

  • துஷொர் கோ துளி
Remove ads

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, நாடகம் ...

விருதுகள்

  • 2000 - ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது[3]
  • 2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்[4]
  • 2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - (கோலங்கள்)[5]
  • 2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருது - (கோலங்கள்)
  • 2010 - ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது[6]
  • 2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - (கொடி முல்லை)[7]
Remove ads

ஆதாரம்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads