கிவா கானரசு

1511-1920 நடு ஆசியக் கானகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிவா கானரசு என்பது ஒரு நடு ஆசிய அரசியல் அமைப்பு[1] ஆகும். இது 1511ஆம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை உருசியாவின் குவாரசமியா வரலாற்றுப் பகுதியில் அமைந்திருந்தது. 1740 முதல் 1746 ஆம் ஆண்டு வரை அப்சரித்து நாதிர் ஷாவின் ஆக்கிரமிப்பால் குறுகிய காலத்திற்கு தடைப்பட்டிருந்தது. அரல் கடலுக்குத் தெற்கே கீழ் அமு தரியா ஆற்றின் பாசனம் பெற்ற சமவெளியை மையமாக கொண்டு இந்த அரசு அமைந்திருந்தது. இதன் தலைநகரம் கிவா ஆகும். அசுதிரகான் பகுதியில் இருந்து வந்த கொங்கிராடு என்று அழைக்கப்பட்ட ஒரு துருக்கிய-மங்கோலியப் பழங்குடியினரால் இந்த நாடு ஆளப்பட்டது. தற்போதைய மேற்கு உசுப்பெக்கிசுத்தான், தென்மேற்கு கசக்கஸ்தான் மற்றும் பெரும்பாலான துருக்குமேனிசுத்தான் ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே இந்த நாடு கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உருசியர்களின் வருகை வரை இந்த அரசு நீடித்திருந்தது.

1873 ஆம் ஆண்டு இந்த நாடு அதனளவில் மிகவும் சுருங்கி உருசியாவின் பாதுகாப்பு பெற்ற பகுதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற உருசியப் புரட்சியைத் தொடர்ந்து கிவாவிலும் புரட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த அரசு கலைக்கப்பட்டு 1920-ஆம் ஆண்டு குவாரசம் மக்களின் சோவியத் குடியரசு உருவாக்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டு இப்பகுதியானது அதிகாரப்பூர்வமாக சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த நாட்டின் பகுதிகள் பெரும்பாலும் கரகல்பக்கிசுதான், உசுப்பெக்கிசுத்தானின் கோரசம் மாகாணம், மற்றும் துருக்குமேனிசுத்தானின் தசோகுஸ் வெலயட் ஆகியவற்றின் பகுதிகளாக உள்ளன.

Remove ads

குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads