கி. மு (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கி. மு( Kee muu) 2008 ஆம் ஆண்டு மஜித் இயக்கத்தில், புதுமுகங்கள் ஹசன், சாரிகா இவர்களுடன் வடிவேலு, சரண்ராஜ், சூரி ஆகியோர் நடிப்பில், எம். எஸ். யாக் கூப்தீன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் கி. மு (திரைப்படம்), இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகிலுள்ள உப்பளத்தில் பணியாற்றும் ரம்யாவை (சாரிகா) அவளின் தந்தை பவானி (சரண்ராஜ்) தன் ஆட்களுடன் வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று சென்னையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு தன் கடந்தகால வாழ்வை நினைவுகூர்கிறாள் ரம்யா.

பணக்காரரான பவானியின் மகள் ரம்யா. சரவணன் (ஹசன்) கூலிவேலை செய்பவன். சரவணனும் அவனது நண்பர்கள் மூவரும் (சூரி, கார்த்திக் சபேஷ் மற்றும் மார்க்ஸ்) தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பவானி ரம்யாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்கிறார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறும் ரம்யா, சரவணன் மற்றும் அவனது நண்பர்கள் மூவருடன் குற்றாலம், திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு சுற்றித் திரியும்போது கேரளாவில்பவானியின் ஆட்களிடம் சிக்குகின்றனர்.

ரம்யா பவானியிடம் தான் சரவணனைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகிறாள். தன் மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக அதை ஏற்றுக்கொள்ளும் பவானி அவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கிறான். இதை அறியாத பவானியின் ஆட்களில் ஒருவனான காசி (மஜித்) சரவணனைக் கொன்றுவிடுகிறான். சரவணன் இறந்ததால் தற்கொலைக்கு முயலும் ரம்யா காப்பாற்றப்படுகிறாள். இறுதியில் தூத்துகுடியிலுள்ள சரவணன் வீட்டுக்குச் சென்று அங்கு வாழ முடிவெடுக்கிறாள் ரம்யா.

Remove ads

நடிகர்கள்

  • ஹசன் - சரவணன்
  • சாரிகா - ரம்யா
  • வடிவேலு - மாடசாமி
  • சரண்ராஜ் - பவானி
  • சூரி - நெத்திலி முருகன்
  • கார்த்திக் சபேஷ் - சொதப்பல் சொடலைமுத்து
  • மார்க்ஸ் - கணேசன்
  • மஜித் - காசி
  • தம்பி ராமையா
  • அல்வா வாசு
  • பாவா லட்சுமணன்
  • சுப்புராஜ்
  • போண்டா மணி
  • அமிர்தலிங்கம்
  • விஜய் கணேஷ்
  • செல்லதுரை
  • வெங்கல ராவ்
  • ரெங்கம்மா பாட்டி
  • ரிஷா
  • அனிஷா நரங்
  • சங்கீதா பாலன்

இசை

படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் இளங்கோ கலைவாணன்.[5][6] படத்தின் பின்னணி இசையமைத்தவர்கள் சபேஷ் முரளி.

மேலதிகத் தகவல்கள் வ.எண், பாடல் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads