ஆறுமுகநேரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து From Wikipedia, the free encyclopedia

ஆறுமுகநேரிmap
Remove ads

ஆறுமுகநேரி (Arumuganeri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்

இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ள காயல்பட்டினம் ஆகும்.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,968 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 27,266 ஆகும்[5][6]

30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

Remove ads

சிவன் கோவில்

ஆறுமுகநேரியில் இரண்டு சிவன் கோவில் உள்ளது இதில் சோமநாத சாமி கோவில்

பெரிய கோவில் மற்றும் ஆறுமுகநேரி அதிக மக்கள் வரும் கோவில்

இந்த கோவில் சந்தை அருகில் உள்ளது அல்லது மதுரையிலிருந்து திருச்செந்துர் செல்லும் சாலையில் அறுமுகநேரி உள்ளது

பெயர் வரலாறு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக காவடி தூக்கி வரும் பக்தகோடிகள், திருச்செந்தூரில் உறையும் ஆறுமுகப்பெருமானைக் கண்டு வணங்கி வழிபட நேர் வழியாக இவ்விடம் அமைந்ததால் இப்பெயர் பெற்றது. ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள நகரம் என்பதால் ஆறுமுகநகரி என்று வழங்கப்பட்டு, பின்னர் ஆறுமுகநேரி என்று மருவி தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

முக்கிய தொழில்கள்

உப்பு வியாபாரம், நெல் சாகுபடி, முருங்கைக்காய் வியாபாரம், சந்தை வியாபாரம், தொழிற்சாலைப்பணி போன்றவை இவ்வூர் மக்கள் செய்து வரும் முக்கியத் தொழிலாகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.57°N 78.12°E / 8.57; 78.12 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads