கீரிமலை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

கீரிமலை
Remove ads

கீரிமலை (Keerimalai) இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் குன்றும் நன்னீருற்றும் கொண்ட ஒரு புண்ணிய தலமாகும்.[1] இங்கு வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகுலேச்சரம் சிவாலயம், கனிம நீரூற்று ஆகியன அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் கீரிமலை Keerimalai, நாடு ...
Remove ads

அமைவிடம்

கீரிமலை யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 25 கி.மீ. வடக்கேயும், காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இருந்து 2 மைல் மேற்கேயும், பலாலி விமான நிலையத்தில் இருந்து 6 மைல் மேற்கேயும் அமைந்துள்ளது.[2]

கீரிமலையின் வடக்கே பாக்குநீரிணைக் கடல் உள்ளது. கிழக்கே மாவிட்டபுரம், தெற்கே கருகம்பனை, மேற்கே இளவாலை ஆகியன இதன் எல்லைக் கிராமங்களாகும். கீரிமலையின் நில மட்டம் இதன் அயல் கிராமங்களை விட சிறிது உயர்ந்துள்ளது. கடற்கரை முருகைக்கல் பூச்சிகளினால் உண்டாகும் கற்பாறைகளினால் அமைந்துள்ளது.

Remove ads

பெயர்க் காரணம்

Thumb
கீரிமலை நீரூற்று

இங்குள்ள நன்னீரூற்றில் (தீர்த்தத்தில்) கீரிமுகம் கொண்ட ஒரு முனிவர் தீர்த்தமாடி இங்குள்ள குன்றில் தவமிருந்து கீரிமுகம் மாறப் பெற்றார். இதனால் இத்தலம் கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். கிபி 8-ஆம் நூற்றாண்டில் குதிரை முகத்தைக் கொண்ட மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசி இங்கு தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் வரலாறு கூறுகின்றது.

Remove ads

இங்குள்ள கோயில்கள்

நகுலேசுவரமே கீரிமலையில் உள்ள முக்கிய சிவாலயம் ஆகும். இதனை விட வேறும் பல கோயில்கள் உள்ளன.[3]

  • நகுலேச்சரம்
  • கடற்கரைச் சித்தி விநாயகர் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • குழந்தைவேற்சுவாமி சமாதிச் சிவாலயம்
  • சுப்பிரமணியர் ஆலயம்
  • காசி விசுவநாதர் கோயில்
  • கிருஷ்ணர் கோயில்

மடங்கள்

இங்குள்ள ஆலயங்களைத் தரிசிக்க வருவோர்க்கும், நோயாளிகள், பிதிர்க்கடன் ஆற்ற வருவோர் ஆகியோருக்காக பல மடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அவையாவன:

  • சிறாப்பர் மடம்
  • வைத்தியலிங்கம் மடம்
  • கிருஷ்ணபிள்ளை மடம்
  • பிள்ளையார்கோயில் மடம்
  • நாராயணபூடர் புண்ணிய தரும மடம்
  • துறவிகளாச்சிரமம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads