கீரேசன் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீரேசன் மாகாணம் ( துருக்கியம்: Giresun ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக கிழக்கில் டிராப்ஸோன், தென்கிழக்கில் கமஹேன், தெற்கே எர்சின்கான், தென்மேற்கில் சிவாஸ் மற்றும் மேற்கில் ஒர்து ஆகியவை உள்ளன. இந்த மாகாணத்தின் வாகன பதிவு குறியீட்டு எண் 28 ஆகும்.

இந்த மாகாணத்தின் தலைநகர் கீரேசன் நகரம் ஆகும்.
Remove ads
நிலவியல்
கீரேசன் மாகாணம் விவசாய பகுதி நிறைந்த மாகாணமாகும். மேலும் தாழ்நிலப் பகுதிகள், கருங்கடல் கடற்கரைக்கு அருகில் உள்ளன. இந்த மாகாணம் ஹேசநட் எனப்படும் ஒரு வகையான செம்பழுப்பு நிறக் கொட்டை உற்பத்தியில் துருக்கியில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மேலும் இப்பகுதியானது உலகின் சிறந்த தரமான ஹேசல்நட் உற்பத்திக்கு புகழ்பெற்ற இடமாகும்; ஒரு கீரேசன் நாட்டுப்புற பாடலானது "நீங்கள் என் பக்கத்தில் இல்லாவிட்டால் நான் ஹேசல்நட் சாப்பிட மாட்டேன்" என்று பாடுகிறது. [2] மற்றொன்று ஒரு ஹேசல்நட் மரத்தின் கீழ் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு காதலனைப் பற்றி ஒரு பாடல் உள்ளது. [3]
இந்த மாகாணத்தில் உள்ள உயர்ந்த மலைப்பகுதிகளில் காடுகளாலும், மேய்ச்சல் நிலங்களாலும் சூழப்பட்டுள்ளது. மேலும் மாகாணத்தில் தாமிரம், துத்தநாகம், இரும்பு மற்றும் பிற உலோகங்கச் சுரங்கங்கள் உள்ளன. மாகாண்ணதில் உள்ள மலை கிராமங்கள் தொலைதூரத்தில் மோசமான சாலைகளோடும், உள்கட்டமைப்பு வசதிகள் எதுமற்றும் உள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வேளாண் நிலங்கள் மிகவும் செங்குத்தானவையாக உள்ளன. இதனால் இங்கு கோதுமையை பயிரிட இயலாது. இதனால் மக்காசோள அடை இந்த மலைக் கிராமங்களின் பாரம்பரிய உணவாக உள்ளது.
கருங்கடல் கடற்கரையை ஒட்டிய பகுதிகளின் காலநிலை பொதுவானது, அதாவது மிகவும் ஈரப்பதமானது. மாகாணத்தின் உள்ளூர் தாவரங்களில் பில்பெர்ரிகள் (துருக்கிய "டஃப்லான்") உள்ளடங்கும்.
Remove ads
மக்கள்வகைப்பாடு
இந்த மாகாணத்தில் பாரம்பரியமாக பெரும்பாலும் செப்னி துருக்கியர்களும், சில குறிப்பிட்ட ஊர்ப்புர கிராமங்கள் மற்றும் நகரங்களில் சிறுபான்மையினராக செவனேபுரி ஜார்ஜியர்களும் வசிக்கின்றனர் .
இடம்பெயர்வுகள் காரணமாக, கீரேசன் மாகாண்ணதில் வாழும் கிரேசனியர்களைவிட வெளியே அதிகமானோர் வாழ்கின்றனர்.
மாவட்டங்கள்
கீரேசன் மாகாணத்தில் 16 மாவட்டங்கள் உள்ளன
பண்பாடு
கீரேசன் மாகாணம் பண்பாட்டு ரீதியாக வடக்கிலிருந்து தெற்காக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கீரேசன் கிட்டத்தட்ட அண்டை மாகாணங்களான ஆர்டு மற்றும் டிராப்ஸன் போன்றவற்றின் பண்பாடைக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் தெற்கு கீரேசன் (அக்கா. எபிங்கராஹைசர் பகுதி) அண்டை மாகாணமான சிவாஸ் மாகாணம் மற்றும் மத்திய அனடோலியா பிராந்தியத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் உள்ளது. மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை சார்ந்த நிலைகளில் வடக்கு பகுதி ஆதிக்கம் செலுத்துவதால், மாகாணத்தின் தெற்கு பகுதி பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதில்லை.
கைவினைப்பொருட்கள்
கிரேசனில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதன் காரணமாக, இப்பகுதியில் பொதுவாக மரத்தாலானகைவினைப்பொருட்களில் சிறப்பாக உள்ளது. இங்கு செய்யப்படும் விசித்திரமான சில சிறிய மரக் கைவினைப்பொருட்களான சர்ன்ஸ், கோலெக் (பாலாடைக்கட்டி சேமிக்கும் பானை) மற்றும் கரண்டிகள் போன்றவை நகர்ப்புரங்களுக்கு விசித்திரமானவை ஆகும். இதன் நகரங்களின் பழமையான கைவினைப்பொருட்களாக நெசவுப் பொருட்களாக உள்ளன. கம்பளி, லினன் நூல்கள் மற்றும் இதை ஒத்த பொருட்கள் பல்வேறு உள்ளூர் உடைகள், ஹெய்ப் (தோள்பட்டை பைகள்) போன்ற பைகள் தயாரிக்க கைத்தறிகளில் செயல்படுகின்றன. வலுவான நூல்களும், பின்னப்பட்ட நூல்களும் கைத்தறிகளில் பயன்படுத்தபடுகின்றன.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads