கல்யாண்ஜி-ஆனந்த்ஜி

இந்திய இரட்டை இசையமைப்பாளர்கள் From Wikipedia, the free encyclopedia

கல்யாண்ஜி-ஆனந்த்ஜி
Remove ads

கல்யாண்ஜி - ஆனந்த்ஜி (Kalyanji–Anandji) இரட்டையர்களான இவர்கள் இந்திய இசையமைப்பாளர்களான இருந்தனர். கல்யாண்ஜி விர்ஜி ஷா (30 ஜூன் 1928 - 24 ஆகஸ்ட் 2000) மற்றும் இவரது சகோதரர் ஆனந்த்ஜி விர்ஜி ஷா (பிறப்பு 2 மார்ச் 1933). இருவரும் இந்தியத் திரைப்படத்துறையில் இசையமைத்தற்காக அறியப்பட்டவர்கள். பல பிரபலமான பாடல்கள் இவர்களால் இசையமைக்கப்பட்டன. எஸ். டி. பர்மன், ஹேமந்தா முகர்ஜி, மதன் மோகன், நௌசாத், சங்கர்-ஜெய்கிஷன் மற்றும் ஓ. பி. நய்யார் போன்ற பெரிய இசை இயக்குனர்கள் இந்தித் திரைப்பட இசை உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, இசை அமைப்பாளர்களாக பாலிவுட் திரைப்படத் துறைக்கு வந்தனர். 1968இல் இவர்களது சரசுவதிசந்த்ரா என்ற திரைப்படத்திகு முதல் தேசியத் திரைப்பட விருதை பெற்றனர்.[1] 1992இல் இந்திய அரசு இவர்களுக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.

விரைவான உண்மைகள் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி, பின்னணித் தகவல்கள் ...

டான், பைராக், சரஸ்வதிச்சந்திரா, குர்பானி, முகதர் கா சிக்கந்தர், லாவாரிஸ், திரிதேவ், சஃபர் போன்றவை இவர்களின் சிறந்த படைப்புகளில் சில. கோரா ககாஸ் படத்திற்காக 1975 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதுதை வென்றனர்.[2][3]

கிஷோர் குமார், முகமது ரபி, லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே மற்றும் மன்னா தே உள்ளிட்ட பல பிரபல பாடர்களுக்கு இவர் பல வெற்றிப் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்களின் ஆரம்ப கட்டத்தில், முகமது ரபி இவர்களின் முதல் பாடகர் தேர்வாக இருந்தார்.[4]

Remove ads

தொழில் வாழ்க்கை

கல்யாண்ஜியும் ஆனந்த்ஜியும் கச்சு மாவட்டத்தின் குந்த்ரோடி கிராமத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த ஒரு கச்சி தொழிலதிபரின் மகன்கள். ஒரு இந்திய கணவன்-மனைவி இசைக் குழுவாக இருந்த[5] பாப்லா & காஞ்சன் இவர்களின் சகோதர் ஆவார். சகோதரர்கள் ஒரு இசை ஆசிரியரிடம் இசை கற்கத் தொடங்கினர். தங்களது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை மும்பையின் கிர்காம் பகுதியில் மராத்தி மற்றும் குஜராத்தி சமூகங்களுக்கு இடையே கழித்தனர்.

கல்யாண்ஜி ஒரு இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கிளாவியோலின் என்ற புதிய மின்னணு கருவியுடன். ஹேமந்த் குமார் இசையமைத்த நாகின் (1954) படத்தில் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற நாகின் பீன் பாடலுக்கு இக்கருவி பயன்படுத்தப்பட்டது.[6][7] பின்னர், தனது சகோதரர் ஆனந்த்ஜியுடன் இணைந்து கல்யாண்ஜி விர்ஜி அண்ட் பார்ட்டி என்ற இசைக்குழுவைத் தொடங்கினார். இது மும்பையிலும் வெளியேயும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது.

நிருபா ராய் நடித்த சாம்ராட் சந்திரகுப்தா (1958) படத்தில் இசையமைக்க இவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் பாக்ஸ் 999 போன்ற பல படங்களுக்கு இவர்கள் இசையமைததனர். ஆரம்பத்தில் கல்யாண்ஜிக்கு குதவியாக இருந்த ஆன்ந்த்ஜி , சத்தா பஜார் மற்றும் மதாரி (1959) ஆகிய படங்களில் கல்யாண்சி-ஆனந்த்ஜி இரட்டையர்களை உருவாக்க அதிகாரப்பூர்வமாக தனது சகோதரருடன் சேர்ந்தார். சாலியா (1960) அவர்களின் ஆரம்பகால பெரிய வெற்றிப் படமாகும். 1965 ஆம் ஆண்டில், இமாலே கி காட் மே மற்றும் ஜப் ஜப் பூல் கிலே ஆகிய இரண்டு படங்கள் இந்தித் திரையுலகில் நிரந்தர இசையமைப்பாளர்களாக நிலைநிறுத்தின.

கல்யாண்ஜியும் ஆனந்த்ஜியும் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். அவற்றில் 17 திரைப்படங்கள் பொன்விழா மற்றும் 39 வெள்ளி விழாக்கள் கண்டது.[8] திலிப் குமார், அமிதாப் பச்சன், அனில் கபூர், வினோத் கண்ணா, ரேகா மற்றும் ஸ்ரீதேவி போன்ற பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களில் சிலருடன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்காக இவர்கள் பல தொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.

தற்போது பிரபலமாக இருக்கும் மன்கர் உதாஸ், குமார் சானு, அனுராதா பாட்வால், அல்கா யாக்னிக், சாதனா சர்கம், சப்னா முகர்ஜி, உதித் நாராயண், சுனிதி சௌஹான் போன்ற பல பாடகர்கள் இவர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள். இந்தி படங்களுக்கு சுயாதீனமாக இசையமைப்பதற்கு முன்பு இலட்சுமிகாந்த்-பியாரேலால் கல்யாணஜி ஆனந்த்ஜிக்கு இசை உதவியாளராகப் பணியாற்றினார். கமர் ஜலாலாபாதி, ஆனந்த் பக்சி, குல்சன் பாவ்ரா, அஞ்சான், வர்மா மாலிக் மற்றும் எம். ஜி. அஷ்மத் போன்ற பாடலாசிரியர்களும் இவர்களுடன் இணைந்து பாடல்களை எழுதினர்.

Remove ads

இறப்பு

2000 ஆகஸ்ட் 24 அன்று, கல்யாண்ஜி இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads