குடியரசுத் தலைவர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடியரசுத் தலைவர் நிலையம் என்பது இந்தியக் குடியரசுத் தலைவரின் அலுவல்முறை ஓய்வு இல்லம் ஆகும்.[1] இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் செகந்திராபாத்தில் உள்ள பொல்லாரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
1860 ஆம் ஆண்டு ஐதராபாத்தின் ஐந்தாம் நிசாம் நாசிர்-உத்-தௌலாவால் கட்டப்பட்ட இல்லமாகும்.[2] 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் போலோ நடவடிக்கையின் வாயிலாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டவுடன் இது குடியரசுத்தலைவரின் தென்னகத் தற்காலிகத் தங்குமிடமாய்ப் பயன்பாட்டில் உள்ளது.[3]
இல்லம்
90 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த இல்லம் 16 அறைகளை உடையது. அரசவை, திரைப்பட அறை, உணவுப் பந்தியறை உள்ளிட்ட அறைகள் இல்லத்தில் அமைந்துள்ளன.
மூலிகைத் தோட்டம்
திசம்பர் 2009 இல் 7000 சதுரமீட்டர் பரப்பில் மூலிகைத் தோட்டம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டது. சந்தனம், துளசி, சர்ப்பகந்தா உள்ளிட்ட 116 மூலிகை மற்றும் நறுமணச் செடிகள் இங்கு பேணப்படுகின்றன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads