சிக்கந்தராபாத்

விக்கிமீடியப் பகுப்பு From Wikipedia, the free encyclopedia

சிக்கந்தராபாத்map
Remove ads

சிக்கந்தராபாத் அல்லது செக்கந்திராபாத், ஒலிப்பு (தெலுங்கு: సికింద్రాబాద, Urdu: سکندرآباد) இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தின் வடக்கே உள்ளது. இது ஐதராபாத் நகரின் இரட்டை நகரமாக பரவலாக அறியப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய படைத்தளமாக உருவாக்கப்பட்ட இந்நகரம், ஆசப் சாகி அரச குடியின் மூன்றாம் நிசாமான சிக்கந்தர் சா என்பவரின் பெயரை முன்வைத்து சிக்கந்தராபாத் என்று பெயரிடப்பட்டது. சிக்கந்தராபாத் நகரம் ஐதராபாத் நகரத்தில் இருந்து உசேன் சாகர் ஏரியால் பிரிந்திருந்தாலும், இன்று, ஐதராபாத் மாநகரின் ஒரு பகுதியாகவே மாறி உள்ளது. மாநிலத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கு, இரு நகரங்களும் இணைந்து ஐதராபாத் என்ற மாநகரமாகவே அறியப்படுகிறது. இரண்டு நகரங்களும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் வெவ்வேறு வரலாறும் பண்பாட்டுப் பின்னணியும் கொண்டுள்ளன. 1948 வரை, சிக்கந்தராபாத் பிரித்தானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. ஐதராபாதோ நிசாம் அரசின் தலைநகராக விளங்கியது.[1]. இந்தியாவின் மிகப் பெரிய படைத்தளங்களில் ஒன்றான சிக்கந்தராபாதில், இந்திய இராணுவ தரைப்படையும் வான் படையும் பெரிய அளவில் நிலை கொண்டுள்ளன. [2][3]

விரைவான உண்மைகள்
Remove ads

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads