1860
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1860 (MDCCCLX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1][2][3]

Remove ads
நிகழ்வுகள்
- ஏப்ரல் 7 - இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பிரிட்டன் அறிமுகம் செய்தது.
- மே 6 - கரிபால்டியும் அவனது படைகளும் "இரண்டு சிசிலிகளின் பேரரசை"க் கைப்பற்றும் நோக்கில் இத்தாலியின் ஜெனோவா நகரை விட்டுப் புறப்பட்டனர்.
- மே 15 - கரிபால்டியின் படைகள் சிசிலியில் நேப்பில்ஸ் நகரின் படைகளைத் தோற்கடித்தன.
- மே 27 - கரிபால்டியின் படைகள் சிசிலியின் தலைநகர் பெலேர்மோவைக் கைப்பற்றினர்.
- சூன் 24 - புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
- சூலை 15 - இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.
- ஆகத்து 4 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.
- ஆகத்து 22 - பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.
- செப்டம்பர் 7 - "லேடி எல்ஜின்" என்ற கப்பல் மிச்சிகன் ஆற்றில் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 7 - கரிபால்டியின் படைகள் நேப்பில்சைக் கைப்பற்றினர்.
- நவம்பர் 6 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
பிறப்புகள்
- பெப்ரவரி 18 - ம. சிங்காரவேலர் ( இ. 1946)
- மே 20 - எடுவர்டு பூக்னர், (இ. 1917)
இறப்புகள்
1860 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
