கும்பகோணம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கும்பகோணம் தொடருந்து நிலையம்
Remove ads

கும்பகோணம் தொடருந்து நிலையம் (Kumbakonam Railway Station, நிலையக் குறியீடு:KMU) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை எழும்பூர்தஞ்சாவூர் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1]

விரைவான உண்மைகள் கும்பகோணம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

கும்பகோணம் தொடருந்து நிலையம் ஆனது, 1877 பிப்ரவரி 15 ஆம் தேதி பயணிகள் சேவைக்கு திறக்கப்பட்டது, அப்போது தென்னிந்திய இரயில்வே தஞ்சாவூர் மற்றும் மாயவரம் (தப்போது மயிலாடுதுறை) இடையே 70.42 கி.மீ தூரத்திற்கு தொடருந்து போக்குவரத்தைத் தொடங்கியது.

அமைவிடம்

இந்நிலையம் கும்பகோணத்தில், காமராஜர் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் 900மீ தொலைவிலும், நகரப் பேருந்து நிலையம் 1000மீ தொலைவிலும் உள்ளது. நகரப் பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்துடன், நேரடியாக இணைக்கப்பட்ட நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்து சேவைகள் உள்ளன. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 81 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

Remove ads

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கும்பகோணம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 120 கோடி 60 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இப்பணிகள் வரும் 2028 மகாமகத்திற்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.[7][8][9][10][11][12][13]


  • தற்பொழுது முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடைகள் இடையே 24பெட்டிகள் நிறுத்தும் வண்ணம் ஒரு இரயில் பாதை மட்டும் உள்ளது.
  • இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகள் இடையே மொத்தம் மூன்று பாதைகள் உள்ளன. இரண்டாவது இரயில்பாதையில் 17-18 பெட்டிகளை நிறுத்தும் வண்ணமும் , மூன்றாவதாக இரயில் பாதையில் இந்த நிலையத்தில் நிறுத்தமில்லா விரைவு வண்டிகள், சரக்கு வண்டிகள் செல்லும் வண்ணமும், நான்காவது இரயில்பாதையில் 12-13 பெட்டிகளை நிறுத்தும் வண்ணம் மூன்றாவது நடைமேடை உள்ளது.


  • மேம்பாட்டு பணிகளுக்குப் பிறகு நான்கு நடைமேடைகள் நான்கு பாதைகளாக உருவாக்கப்படும்.[14]
  • தற்போதைய மூன்றாவது நடைமேடையானது 18 பெட்டிகளை நிறுத்தும் வண்ணம் நான்காவது நடைமேடையாக மாற்றப்படும்.
  • மூன்றாவது இரயில் பாதை முற்றிலும் அகற்றப்படும்.
  • தற்போதைய இரண்டாவது நடைமேடையானது சற்று மாற்றப்பட்டு அதன் இருபுறமும் 24பெட்டிகளை நிறுத்தும் வண்ணம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இரயில் பாதையாகவும், நடைமேடையாகவும் உருவாக்கப்படும்.
  • முதலாம் நடைமேடை முற்றிலும் புதிதாக லூப் பாதையுடன் திருத்தி அமைக்கப்படும்.

வழித்தடங்கள்

அருகிலுள்ள நிலையங்கள்

  • தாராசுரம் (DSM)
  • சுந்தரபெருமாள் கோவில் (SPL)
  • சுவாமிமலை (SWI)
  • பாபநாசம் (PML)
  • திருநாகேசுவரம் (TRM)
  • திருவிடைமருதூர் (TDR)
  • ஆடுதுறை (ATD)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads