நீடாமங்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீடாமங்கலம் (Needamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், முதல் நிலை பேரூராட்சியும் ஆகும். “ இப்பகுதி சோழர்கள் ஆட்சி காலத்தில் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. ” நீடாமங்கலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
Remove ads
அமைவிடம்
நீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூருக்கு 27 கி.மீ. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் தஞ்சாவூர் 32 கி.மீ.; வலங்கைமான் 15கி.மீ.; மன்னார்குடி 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் சோழநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.62 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2392 வீடுகளும், 9336 மக்கள்தொகையும் கொண்டது. [5] [6]
பெயர்க் காரணம்
நீராட்டு மங்கலம் என்பதே இவ்வூரின் பழைய பெயர் என்ப, இவ்வூரை அடுத்து “கோவில்வெண்ணி”” என்றழைக்கப்படும் பெருங்கிராமம் உள்ளது. இக்கோயில்வெண்ணியில் வெண்ணிப் பறந்தலையில் போர் முடித்த கரிகால் சோழன் அருகில் இருந்த நீடாமங்கலத்தில் வெற்றிக்குக் காரணமாய் இருந்த தன் வாளுக்கு, வாள்மங்கலம் அதாவது நீராட்டுமங்கலம் செய்வித்தமையாலேயே இவ்வூருக்கு நீராட்டுமங்கலம் என்ற பெயர் வந்தது என்றும் அதுவே நாளடைவில் நீடாமங்கலம் ஆயிற்று என்றும் கூறுவர். இவ்வூரின் வேறு பெயர் யமுனாம்பாள்புரம் என்பதாகும். ராஜ பிரதாப சிங் என்பவனால் அவன் மனைவியருள் ஒருத்தியான யமுனாம்பாள் என்பவளுக்காக இவ்வூரில் அரண்மனையும், சத்திரமும் கட்டப்பெற்றமையின், அம்மாதரசியின் பெயரால் யமுனாம்பாள்புரம் என அழைக்கப் பெற்றது.[7]
Remove ads
கோயில்கள்
புகழ்பெற்றவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads