குவாங்டொங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாங்டொங் (சீன மொழி: 广东; பாரம்பரிய சீனம்: 廣東; ஆங்கிலம்: Guangdong; பின்யின்: Guǎngdōng; ஜியுட்பிங்: 2 gwong 1 gwong) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் தென் சீனக்கடற்கரையை ஒட்டி உள்ள மாகாணங்களுள் ஒன்று. இது முன்னர் ஆங்கிலத்தில் கேன்டன் (Canton) அல்லது குவாங்டுங் (Kwangtung) என அழைக்கப்பட்டது.
நிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட [5][6] குவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.[7]
மாகாணத் தலைநகராக குவாங்சௌ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். 1989 முதல், குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
Remove ads
பெயர்
"குவாங்" என்ற சொல்லுக்கு "விரிவடைவது" அல்லது "பரந்த" என்று பொருள், "டாங்" என்ற சொல் "கிழக்கு" திசையைக் குறிக்கும். குவாங்டாங் என்ற சொல் கிழக்குப்பெருவெளி என்பதாகும். கி.பி. 226 இல் குவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]
நிலவியல்
குவாங்டொங் மாகாணத்தின் தெற்கில் தென் சீனக்கடலைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரை 4,300 கி.மீ. (2,700 மைல்) நீண்டுள்ளது. லைச்சௌ தீபகற்பம் மாகாணத்தின் தென்மேற்கு முனையில் உள்ளது. ஒரு சில செயலற்ற எரிமலைகள் லைச்சௌ தீபகற்பத்தில் உள்ளன. சூகோங்சாங்கொக்சௌ எனப்படும் முத்து ஆற்றுப்படுகையில் கிழக்கு ஆறு, வடக்கு ஆறு, மேற்கு ஆறு எனப்படும் மூன்று ஆறுகள் குவிகின்றன. இந்த ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் உள்ளன. மாகாணத்தைப் புவியியலடிப்படையில் வடக்கில் இருந்து பிரிக்கும் விதமாக உள்ள மலைத்தொடர்களைக் கூட்டாக நான் மலைகள் (நான் லிங்) என அழைக்கப்படுகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரமான ஷிகெங்கோங் கடல் மட்டத்தில் இருந்து 1,902 மீட்டர் உயரத்தில் உள்ளது.
குவாங்டொங் மாகாண எல்லைகளாக புஜியான் வடகிழக்கிலும், ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்கள் வடக்கிலும், குவாங்ஸி தன்னாட்சி பிராந்தியம் மேற்கிலும், ஹாங்காங் மற்றும் மகாவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தெற்கு பகுதியிலும் உள்ளன.
குவாங்டொங் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கில் வெப்பமண்டல காலநிலையை ஒட்டியுள்ளது. குளிர்காலம் குறுகியதாகவும், கனிவானதாகவும் மழையற்று உலர்வாகவும் இருக்கும்; கோடைக்காலம் நீண்டதாகவும், சூடாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். சனவரி மற்றும் சூலை மாதங்களில் இதன் வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் (64 ° ஃபா) மற்றும் 33 ° செ (91 ° ஃபா) நிலவும், எனினும் கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் வெக்கையாக இருக்கும். கடற்கரையில் பெரும்பாலும் உணரப்படாவிடினும் உள்நாட்டுப் பகுதியில் குளிர்காலத்தில் ஒரு சில நாட்கள் பனி நிலவுகிறது.
Remove ads
பொருளாதாரம்
குவாங்டொங்ஙின் பொருளாதாரம் பல நாடுகளுக்கு இணையாக ஒப்பிடுமளவிற்கு அதிக அளவு வளர்ந்துள்ளது. 2014 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுமார் $ 1104,05 பில்லியன். இம்மாகாணம் 1989 ஆம் ஆண்டு முதல் சீனாவின் உண்ணாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. குவாங்டொங் சீனாவின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியில் 10.36 விழுக்காட்டை ($ 10.36 டிரில்லியன்) நிறைவு செய்கிறது. அமெரிக்க டாலர் அடிப்படையில் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிடப் பெரியது ஆகும். குவாங்டாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 நாடுகளின் துணைப்பிரிவுகள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியது. அவை இங்கிலாந்து , கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர பகுதி ஆகியவை ஆகும்.
மக்கள் வகைப்பாடு
குவாங்டொங் 2005 ஜனவரியில் அலுவல்முறையாக அதிக மக்கள் நிறைந்த மாநிலம் என்றானது.[5][6] பிற மாகாணங்களில் இருந்து மக்கள் குடியேறுவதால் மக்கள் தொகை பெருகிவருகிறது. குவாங்டாங்கில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால், தொழிலாளர் அதிக அளவில் தேவைப்படுவதன் காரணமாக குடியேற்றம் நிகழ்கிறது. குவாங்டொங் ஒரு சுதந்திர நாடாக இருந்தால், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் போன்ற உலகின் இருபது பெரிய நாடுகளைவிட மக்கள் தொகையில் மிகுந்து இருக்கும். மேலும் அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிடக் கூடுதல் ஆகும். இந்த மாகாணத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர் ஆவர். குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடும்போது மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1-4 வயது வரை உள்ள குழந்தைகளில், 100 சிறுமிகளுக்கு 130 சிறுவர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.[9]
Remove ads
சமயம்
2012 ஆண்டு கணக்கெடுப்புப்படி[10] குவாங்டோங் மொத்த மக்கட்டொகையில் 7% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர் ஆவர். இதில் பெரிய சமயக்குழுவாக இருப்பது புத்தசமயத்தினர் (6.2%), சீர்திருத்த கிருத்துவர் 0.8% கத்தோலிக்கர்கள் 0.2% ஆவர். மக்கள் தொகையில் 93% சமயப்பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாட்டுமுறையைக் கொண்டவர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புற மதத்தினராகவோ உள்ளனர்.[11] 2007 ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, மக்கள் தொகையில் 43.71% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.[12]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads