குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kwasa Damansara MRT Station; மலாய்: Stesen MRT Kwasa Damansara; சீனம்: 桂莎白沙羅站) என்பது மலேசியா, சிலாங்கூர், குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதியில்; எம்ஆர்டி காஜாங் வழித்தடம் மற்றும் எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் தற்போது சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களால் காஜாங் வழித்தடத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கும் விழா இந்த நிலையத்தில் திசம்பர் 15, 2016 அன்று நடைபெற்றது. மேலும் இந்த நிலையம் திசம்பர் 16, 2016 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[1][2] இந்த நிலையம் பின்னர் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்திற்கும் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்திற்கும் இடையில் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியது.
இந்த நிலையம் 2022 சூன் 16 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. எம்ஆர்டி காஜாங் வழித்தடம் மற்றும் எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களும் தற்போது இந்த நிலையத்தில் முடிவடைகின்றன.[3]
Remove ads
பொது
இந்த நிலையம், எதிர்கால குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்டத்திற்குள் சேவை செய்யும் இரண்டு நிலையங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த நிலையம் சுங்கை பூலோவிலிருந்து ("சுங்கை பூலோ சாலை") தொலைவில் அமைந்திருப்பதால், நிலையத்திற்கு அணுகலை வழங்க ஒரு புதிய அணுகல் சாலையும் கட்டப்பட்டது.
குவாசா டாமன்சாரா நிலையத்தின் தண்டவாளங்கள் மேல்தளத்தில் அமைந்து இருந்தாலும், அதன் நிலையக் கட்டிடம் தரைத் தளத்தில்தான் உள்ளது. காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரே ஒரு நிலையம் இதுவாகும். ஆனாலும் கிளானா ஜெயா வழித்தடத்தில் இது போன்று பல நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையம் மூன்று தளநிலைகளைக் கொண்டுள்ளது, தரைத்தளம் ஒரு கூட்டுத் தொடராகவும், மேலே உள்ள இரண்டு தளங்கள் நடைமேடை நிலைகளாகவும் உள்ளன. இரண்டு உயர்த்தப்பட்ட தளங்கள் தீவுத் தளங்களாகும். இதனால் இந்த நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்திற்கும் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்திற்கும் இடையிலான பரிமாற்ற நிலையமாக செயல்பட நான்கு தளங்களைக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
நிலையப் பெயர்களை உறுதி செய்வதற்கு முன்பு குவாசா டாமன்சாரா திட்டத்தின் தொடக்ககாலக் கட்டங்களில், குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் என்பது கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் என்ற செயல்பாட்டுப் பெயரால் குறிப்பிடப்பட்டது.[4]
கோத்தா டாமன்சாரா என்ற பெயர் தொடக்கத்தில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது; ஏனெனில் கோத்தா டாமன்சாரா எனும் பெயரில் மற்றொரு நிலையம் இருந்தது. அதன் காரணமாக இந்த நிலையத்திற்கு இறுதியில் குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் என்று பெயர் வழங்கப்பட்டது.
Remove ads
நிலைய இருப்பிடம்
L2 | நடைமேடை 1 | 9 காஜாங் (←) KG35 காஜாங் (←) |
தீவு மேடை | ||
நடைமேடை 4 | 12 புத்ராஜெயா முடிவிடம் | |
L1 | நடைமேடை 2 | 9 காஜாங் முடிவிடம் |
தீவு மேடை | ||
நடைமேடை 3 | 12 புத்ராஜெயா (→) PY41 புத்ராஜெயா சென்ட்ரல் (→) | |
G | இணைப்புவழி | கட்டணப் பகுதிக்குள் கட்டண நுழைவாயில்கள்; தளங்களுக்கு இடையே நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள்; பிரதான நுழைவாயில்; வாடகை கார்கள் நிறுத்துமிடத்திற்கு இணைப்பு நடைபாதை, பணியாளர்கள் வாகனங்கள் நிறுத்துமிஎடம் |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
இந்த நிலையத்தில் தற்போது நுழைவு A எனும் ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. இருப்பினும் எதிர்காலத்தில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி மேம்படுத்தப்படும்போது; எதிர்கால நுழைவாயில்களை வடிவமைக்கும் வகையில் தற்போதைய இந்த நுழைவாயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய நுழைவாயில் இந்த நிலையத்திற்கான அணுகல் சாலை; பூங்கா; மற்றும் வாகன சவாரி வசதிகளுக்கு வழிவகுக்கிறது.
Remove ads
புத்ராஜெயா வழித்தடம்
சூன் 16, 2022 அன்று புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்திற்கான முதல் கட்டச் செயல்பாடுகள் தொடங்கியபோது, இந்த நிலையம் அந்த வழித்தடத்தின் வடக்கு முனையமாக மாறியது. அதே வேளையில், இந்த நிலையம் சுங்கை பூலோ எம்ஆர்டி நிலையத்தை காஜாங் வழித்தடத்தின் வடக்கு முனையமாக மாற்றியது.
இதன் விளைவாக, முன்னர் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருந்த கம்போங் செலாமாட் எம்ஆர்டி நிலையம் மற்றும் சுங்கை பூலோ நிலையம் ஆகியவை புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்திற்கு மாற்றப்பட்டன.
Remove ads
காட்சியகம்
குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2016 - 2025):
மேலும் காண்க
- SP31 KJ37 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம்; இதே போன்ற குறுக்கு-தள அமைப்பைக் கொண்டுள்ளது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads