காஜாங் வழித்தடம்

From Wikipedia, the free encyclopedia

காஜாங் வழித்தடம்
Remove ads

காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; மலாய்: Laluan Kajang அல்லது Laluan MRT Kajang) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

விரைவான உண்மைகள் காஜாங் வழித்தடம் Kajang Line, கண்ணோட்டம் ...

கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு என அறியப்படுகிறது.[2]

Remove ads

பொது

இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் (Rapid Rail) நிறுவனத்தின் ரேபிட் கேஎல் (RapidKL) சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.

சுங்கை பூலோவிற்கும் செமாந்தான் நிலையத்திற்கும் இடையிலான முதலாம் கட்டச் சேவைகள் 2016 டிசம்பர் 16-ஆம் தேதி தொடக்கப்பட்டன. தேசிய அரும்காட்சியகம் மற்றும் காஜாங் இடையிலான இரண்டாம் கட்டச் சேவைகள் 2017 சூலை 17-ஆம் தேதி தொடக்கப்பட்டன.

Remove ads

வரலாறு

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும், 2006 ஆகத்து மாதம் 10 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதாக அப்போதைய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் முதலில் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.[3][4][5]

கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், பொதுப் போக்குவரத்தைப் பற்றி பொதுமக்கள் இடையே ஊக்குவிப்பதற்காகவும், ஒரு புதிய இலகு விரைவு தொடருந்து சேவை முன்மொழியப்பட்டது. அந்த வகையில் எல்ஆர்டி கோத்தா டாமன்சாரா–செராஸ் வழித்தடத் திட்டம் முதல் திட்டமாக இலக்கு வைக்கப்பட்டது. அந்த வழித்தடம் ஏறக்குறைய 30 கிமீ (19 மைல்) நீளம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.[6]}}

பிரசரானா மலேசியா

இதற்கிடையில் கிளானா ஜெயா வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய புதிய வழித்தடங்களின் கட்டுமானப் பொறுப்பு பிரசரானா மலேசியா நிறுவனத்திற்கு (Syarikat Prasarana Nasional Berhad) வழங்கப்பட்டது.[7]

இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட கோத்தா டாமன்சாரா–செராஸ் புதிய வழித்தடத்தின் ஒருங்கிணைந்த செலவு RM 7 பில்லியன் வரை வரலாம் என மதிப்பிடப்பட்டது. அத்துடன் அந்த வழித்தடத்தில் 140 தொடருந்து வண்டிகள் சேவை செய்வதற்கும் திட்டமிடப்பட்டது.[8]

கோலாலம்பூர் மையத்தில் நிலத்தடி வழித்தடம்

புதிய வழித்தடத்தை அமைக்க சூலை 2007-இல் மலேசிய போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் வழங்கியது. கோத்தா டாமன்சாராவில் இருந்து செராஸ் மற்றும் பாலாக்கோங் வரையிலான வழித்தட 2012-க்குள் முடிக்கப்படும் என்று மலேசிய நிதி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அறிவித்தார்.[9]

காஜாங் வழித்தடம், குவாசா டாமன்சாராவில் இருந்து காஜாங் வரையில் 47 கிலோமீட்டர் (29 மைல்) தூரத்தை உள்ளடக்கியது. இந்த வழித்தடம் கோலாலம்பூர் நகர மையத்தில் நிலத்தடியில் செல்கிறது. அந்த வகையில் கோலாலம்பூர் நகர மையத்தின் நிலத்தடியில் 7 நிலையங்கள் உள்ளன.[10]

Remove ads

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

தொடருந்து நிலையங்கள்

குறியீடு பெயர் நிலையம் திறப்பு நிலை
 KG04  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG05  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் Thumb - -
 KG05A  டெக்னோலஜி எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 தற்காலிக நிலையம்
 KG06  கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG07  சூரியன் எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG08  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG09  பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG10  துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG11  செக்சன் 17 - - -
 KG12  பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG12A  புக்கிட் கியாரா எம்ஆர்டி நிலையம் Thumb 16 டிசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG13  பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG14  செமாந்தான் எம்ஆர்டி நிலையம் Thumb 16 திசம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG15  மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG16  பசார் செனி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG17  மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG18A  புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG20  துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG21  காக்ரேன் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG22  மலூரி நிலையம் Thumb 17 சூலை 2017 நிலத்தடி நிலையம்
 KG23  தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG24  தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG25  தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG26  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG27  தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG28  செரி ராயா எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG29  பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG30  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG31  புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG32  தாமான் மெஸ்ரா - - -
 KG33  சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG34  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
 KG35  காஜாங் தொடருந்து நிலையம் Thumb 17 சூலை 2017 உயர்த்தப்பட்ட நிலையம்
Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads