குவாசா டாமன்சாரா

ஒரு புதிய புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

குவாசா டாமன்சாரா
Remove ads

குவாசா டாமன்சாரா (மலாய்; ஆங்கிலம்: Kwasa Damansara); சீனம்: 桂莎白沙罗) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ஒரு புதிய புறநகர்ப் பகுதி ஆகும்.[1]

விரைவான உண்மைகள் குவாசா டாமன்சாரா Kwasa Damansara, நாடு ...
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

கோலாலம்பூரின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ தொலைவில் இந்த நகர்ப்பகுதி அமைந்துள்ளது. இந்த நகர்ப்பகுதி அதன் தெற்கே கோத்தா டாமன்சாராவையும் வடக்கே சுங்கை பூலோவையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்டம் 2035-ஆம் ஆண்டு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம், 2010-இல் அறிவிக்கப்பட்ட 10-ஆவது மலேசியா திட்டத்தின் பெரும் கோலாலம்பூர் உத்திசார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (Greater Kuala Lumpur Strategic Development Project) ஒரு பகுதியாகும்.[2]

Remove ads

பின்னணி

குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்டம் சுங்கை பூலோவில் உள்ள மலேசிய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (RRIM) சொந்தமான 2330 ஏக்கர் (939-எக்டேர்) இடத்தில் அமைந்துள்ளது. 2010-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக், அந்த நிலம் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

2012-ஆம் ஆண்டில், மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் துணை நிறுவனமான குவாசா லேண்ட் நிறுவனம், இந்த நிலத்தை RM 2.3 பில்லியனுக்கு வாங்கியது; மற்றும் முன்மொழியப்பட்ட நகர்ப்புற்த்திற்கான முதன்மை மேம்பாட்டாளராகவும் பணி அமர்த்தப்பட்டது.

Remove ads

அம்சங்கள்

இந்த நகர்ப்புறம் சுங்கை பூலோ-சுபாங் ஜெயா சாலையில், சுங்கை பூலோவிற்கும் சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் அந்த வளாகம் குடியிருப்பு, வணிக, கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தப் பகுதியில் இரண்டு விரைவுப் போக்குவரத்து நிலையங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் 150,000 பேர் குடியேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[3][4]

இந்த நகர்ப்புறத்தின் வடக்குப் பகுதி சா ஆலாம் நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. மற்றும் அதன் தெற்குப் பகுதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ளது.

Remove ads

போக்குவரத்து

எம்ஆர்டி

இந்த நகர்ப்புறம்  KG04   PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; மற்றும்  KG05  குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் ஆகிய இரு நிலையங்களால் சேவை செய்யப்படுகிறது.

ஊர்தி

சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை எனும் கூட்டரசு சாலை இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய சாலையாகும்.

வானூர்தி

குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதி; சுபாங் வானூர்தி நிலையத்திலிருந்து (IATA: SZB) வடகிழக்கே 5.5 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து

ரேபிட் கேஎல் பேருந்து T804 , குவாசா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்தையும்; சுபாங் வானூர்தி நிலைய முனையக் கட்டிடத்தையும் இணைக்கிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads