குவார் செம்படாக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவார் செம்படாக் (மலாய்: Guar Chempedak; ஆங்கிலம்: Guar Chempedak; சீனம்: 瓜尔豆) மலேசியா, கெடா மாநிலத்தில், யான் மாவட்டத்தில் (Yan District), ஜெராய் மக்களவை தொகுதியில் (Jerai Federal Constituency) அமைந்துள்ள ஒரு சிறு நகரம்.[1]
அலோர் ஸ்டார் மாநகருக்கும் சுங்கை பட்டாணி பெருநகருக்கும் இடையில்; குரூண் நகருக்கு வடக்கில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரமாக அறியப்படுகிறது.
Remove ads
பொது
கெடாவின் பிரபலமான இயற்கை நீர்வீழ்ச்சிகள் இந்த நகருக்கு அருகில் உள்ளன.
யான் மாவட்டம்
யான் மாவட்டத்தின் வடக்கே கோத்தா ஸ்டார் மாவட்டம், வடகிழக்கில் பெண்டாங் மாவட்டம் மற்றும் தெற்கே கோலா மூடா மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
யான் மாவட்டம் மலாக்கா நீரிணையின் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இது கெடா மாநிலத்தின் மிகச் சிறிய மாவட்டம் ஆகும். "யான் பெசார்" என்பது யான் மாவட்டத்தின் நிர்வாக நகரமாகும். யான் பெசார் நகரத்தில் காவல் நிலையங்கள், கீழ்நிலை நீதிமன்றம், மாவட்ட அலுவலகம் மற்றும் நில அலுவலகம் போன்ற நிர்வாக வசதிகள் உள்ளன.
நிர்வாகப் பிரிவுகள்

கெடாவில் மிக உயரமான சிகரம் கொண்ட ஜெராய் மலை இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1242 மீட்டர்கள் (3,235 அடி) உயரம் கொண்டது. ஜெராய் மலையின் உச்சிக்கு தித்தி அயூன் நீர்வீழ்ச்சியின் வழியாகப் படிக்கட்டுகளின் மூலம் ஏறிச் செல்லலாம்.
யான் மாவட்டம் 5 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[6]
- துலாங் (Dulang)
- சாலா பெசார் (Sala Besar)
- சிங்கீர் (Singkir)
- சுங்கை டவுன் (Sungai Daun)
- யான் (Yan)
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads