கூச்சாய் லாமா சாலை

கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலை From Wikipedia, the free encyclopedia

கூச்சாய் லாமா சாலை
Remove ads

கூச்சாய் லாமா சாலை அல்லது கூச்சாய் லாமா நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Kuchai Lama Road; மலாய்: Jalan Kuchai Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலை ஆகும். கோலாலம்பூரின் பழமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாக அறியப்படுகிறது.[1] இருப்பினும், அண்மைய காலங்களில் இந்தச் சாலை மறுசீரமைக்கப்பட்டு ஒரு விரைவுச்சாலைத் தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டு உள்ளது.

விரைவான உண்மைகள் கூச்சாய் லாமா சாலைJalan Kuchai Lama, முக்கிய சந்திப்புகள் ...

இந்த சாலை, கோலாலம்பூர் மாநகராட்சி (Dewan Bandaraya Kuala Lumpur) (DBKL) எனும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தால் பராமரிக்கப்படுகிறது.

Remove ads

பொது

ஆகஸ்டு 2004-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு, சனவரி 2008-இல் நிறைவடைந்தது. புதிய சாலைப் பரிமாற்ற இணைப்புகள் 28 பிப்ரவரி 2008 அன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன.

2010-களில், பந்தாய் புதிய விரைவுச்சாலை மற்றும் சுங்கை பீசி விரைவுச்சாலை ஆகிய விரைவுச்சாலைகளை இணைக்கும் வகையில், ஐஜேஎம் நிறுவனம் (IJM Corporation), சிறப்புச் சரிவுப் பாதைகளை உருவாக்கியது.

பந்தாய் புதிய விரைவுச்சாலை

பந்தாய் புதிய விரைவுச்சாலை ( New Pantai Expressway) என்பது தீபகற்ப மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு விரைவுச்சாலை ஆகும். 19.6-கிலோமீட்டர் (12.2-மைல்) நீளம் கொண்டது. சிலாங்கூரின் தென்மேற்குப் பகுதியில், சுபாங் ஜெயாவிற்கு அருகில் உள்ள மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலைக்கு இணையாகச் செல்கிறது. அதே வேளையில், வட கிழக்கில் பங்சார் பகுதியில் தொடங்குகிறது.[2]

30 ஏப்ரல் 2004-இல் திறக்கப்பட்ட இந்த விரைவுச்சாலை, சுபாங் உத்தாமா சாலை, கிள்ளான் லாமா சாலை, பந்தாய் டாலாம் சாலை என முன்பு அறியப்பட்டது.[3]

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads