கூச்சாய் லாமா
கோலாலம்பூர் மாநகரத்தில் புற நகரப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூச்சாய் லாமா (மலாய்; ஆங்கிலம்: Kuchai Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் உள்ள ஒரு புற நகரப் பகுதியாகும். கிள்ளான் லாமா சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதி, கோலாலம்பூரில் உருவாகப்பட்ட குடியிருப்பு வாழ்விடங்களில் மிகப் பழைமையானவற்றுள் ஒன்றாக அறியப்படுகிறது.[1]
தற்போது இங்கு வெளிநாட்டவர்கள் மிக அதிக அளவில் வசிக்கிகின்றனர். சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்; அல்லது ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்கள் இங்கு அதிகமானோர் வாழ்கின்றனர். அதன் காரணமாக இந்த இடம் வெளிநாட்டினரின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.[2]
Remove ads
பொது
இந்தப் புறநகர் கோலாலம்பூர் மாநகர மையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் புறநகர், தாமான் தேசா, பந்தாய் டாலாம், தாமான் ஓயூஜி மற்றும் சாலாக் செலாத்தான் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் உள்ளது. அஜினோமோத்தோவின் மலேசிய ஆலை இங்கு அமைந்துள்ளது.
கூச்சாய் லாமா, கோலாலம்பூர் நகர மையத்திற்கும் பெட்டாலிங் ஜெயாவிற்கும் இடையே செழிப்பான வணிக நடவடிக்கைகளைக் கொண்டுள்ள புறநகர்ப் பகுதியாக விளங்குகிறது. இந்த இடம் பள்ளிகள், வங்கிகள், உணவகங்கள் போன்ற முழுமையான வசதிகளைக் கொண்டுள்ளது. மற்றும் பல உணவகங்களும் உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள்
இங்கு சீன மக்கள் பெரும்பான்மையானவர்களாக வசித்தாலும்; வெளிநாட்டவர்களின் நடமாட்டம் மிகுதியாகவே உள்ளது. வளர்ச்சியடைந்த போக்குவரத்தின் காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் குடியேறுவதற்கு பொதுமக்கள் விரும்புகின்றனர்.
முதல் உயர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட பிறகு, மற்ற உயர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களும் கட்டப்பட்டன. இப்பகுதியில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கூச்சாய் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 1,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
சாலைகள்
கூச்சாய் லாமா புறநகர்ப்பகுதி, கோலாலம்பூர் நகர மையம், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, சா ஆலாம் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் 8 விரைவுச் சாலைகளைக் கொண்டுள்ளது.
கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை
பெஸ்ராயா விரைவுச்சாலை
கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை
சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway) (KESAS)
Remove ads
விரைவுத் தொடருந்து சேவைகள்
கூச்சாய் லாமாவிற்கு கிளானா ஜெயா வழித்தடத்தின் தொடருந்து சேவைகள் உள்ளன.
தவிர புத்ராஜெயா வழித்தடத்தின் சேவையும் உள்ளது. இந்த வழித்தடத்தில் PY27 கூச்சாய் எம்ஆர்டி நிலையம் உள்ளது. இந்த நிலையம் 2023-ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் தொடங்கியது.
Remove ads
காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads