கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூடலூர் நகராட்சி (GUDALUR MUNICIPALITY) , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்.[1] 29.2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கூடலூர் இந்நகராட்சியானது, 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 38,859 ஆகும். இதில் ஆண்கள் 19,707 மற்றும் பெண்கள் 19,152 ஆகும். கூடலூர் நகராட்சியில் 10 குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. அவைகள்: 1 செல்வபுரம், 2 திருமலைநாயக்கன்பாளையம், 3. சாரங்க நகர் 4. சாமிசெட்டிபாளையம் 5 ஜி. கவுண்டன்பாளையம். 6. தேவயாம்பாளையம் 7. புதுப்புதூர் 8. பழைய புதூர் 9.தெக்குப்பாளையம் 10. ராவுத்தக்கொல்லனூர்.
Remove ads
அமைவிடம்
கூடலூர் நகராட்சி, மாவட்டத் தலைமையிடமான கோயம்புத்தூர் நகரத்திலிருந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், 23 கிலோ மீட்டர் தொலைவிலும். பெரியநாயக்கன்பாளையத்திற்கு தெற்கு 4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 22 வார்டுகளும், 10,897 வீடுகளும் கொண்ட கூடலூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 38,859 ஆகும். இதில் ஆண்கள் 19,707 மற்றும் பெண்கள் 19,152 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3490 (8.98%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 972 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.25% ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 93.97%, இசுலாமியர்கள் 1.21%, கிறித்துவர்கள் 4.58% மற்றவர்கள் 0.24% ஆக உள்ளனர்.[2]
Remove ads
நகராட்சியாக தரம் உயருதல்
16 அக்டோபர் 2021 அன்று கூடலூர் பேரூராட்சியை நகராட்சியாக 33 முதல்நிலை பேரூராட்சிகளை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[3][4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads