கெபிட்டல் சதுக்கம்
கோலாலம்பூர், முன்சி அப்துல்லா சாலையில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெபிட்டல் சதுக்கம் (மலாய்; ஆங்கிலம்: Capital Square அல்லது Cap Square) என்பது மலேசியா, கோலாலம்பூர், முன்சி அப்துல்லா சாலையில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பு; வானளாவி மற்றும் கடைவலக் கட்டிடம் ஆகும்.[3] பண்டார் ராயா மேம்பாடுகள் பெர்காட் நிறுவனத்தால் (Bandar Raya Developments Berhad) உருவாக்கப்பட்டது.
சில்லறை விற்பனை கடைகளைத் தவிர, இந்தக் கட்டிடட்த்தில் ஒரு 36-மாடி கூட்டுரிமை குடியிருப்புத் தொகுதி; மற்றும் ஓர் அலுவலகத் தொகுதியும் உள்ளன. மெனாரா பல்நோக்கு (Menara Multi Purpose) என்ற 40 மாடி அலுவலகத் தொகுதியைக் கொண்ட முதல் கட்டம், 1994-இல் கட்டி முடிக்கப்பட்டது.[4] பண்டார் ராயா மேம்பாடுகள் பெர்காட் நிறுவனத்த்தின் தலைமையகம், மெனாரா பல்நோக்கு கட்டிடத் தொகுதியில் உள்ளது.[5]
Remove ads
வரலாறு
1930-களில், தற்போது கேப் சுகேர் (CapSquare) என்று அழைக்கப்படும் இந்த இடம்; ஒரு பொதுப் பூங்காவாகவும், ஈஸ்டர்ன் ஓட்டல் எனும் தங்கும் விடுதியாகவும் இருந்தது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தப் பூங்காவில் பல திரையரங்குகள் உருவாக்கப்பட்டன.[6]
1997 ஆசிய நிதி நெருக்கடி காரணமாக 1997-ஆம் ஆண்டு முதல் கெபிட்டல் சதுக்கத்தின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் கெப்பிட்டல் சதுக்கத்தில் முழுமையாக முடிக்கப்பட்ட ஒரே கட்டமைப்பு மெனாரா பல்நோக்கு கட்டிடம் மட்டுமே ஆகும்.
மெனாரா பல்நோக்கு கட்டிடம்
மெனாரா பல்நோக்கு கட்டிடம் ஏற்கனவே 1994-இல் கட்டி முடிக்கப்பட்டது. ஓரளவு முடிக்கப்பட்ட கட்டமைப்பு சுமார் 10 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
இருப்பினும் 2008-ஆம் ஆண்டில் கட்டுமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு; 2011-ஆம் ஆண்டில் முடிவடைந்தன. கட்டிடம் கட்டுவதற்கான மொத்தச் செலவு RM 439 மில்லியன் ஆகும்.[7]
Remove ads
அணுகல்
கெப்பிட்டல் சதுக்கத்திற்கு எதிரே முன்சி அப்துல்லா சாலை பேருந்து மையம் உள்ளது. GOKL 01
GOKL 02
GOKL 06 ரேபிட் கேஎல்; SJ பேருந்து; சிலாங்கூர் பேருந்து மற்றும் கோ கேஎல் பேருந்துகள் போன்ற பேருந்துகள் சேவை செய்கின்றன.
* | பெரும்பாலான அரசு பேருந்துகள் இலவசச் சேவையை வழங்குகின்றன |
தொடருந்து நிலையங்கள்
கெப்பிட்டல் சதுக்க வளாகத்திற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:
- AG7 SP7 KJ13 மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்
- AG6 SP6 பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
- KA03 பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
- KJ12 டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads