மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் அல்லது மஸ்ஜித் ஜமெயிக் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Masjid Jamek LRT Station; மலாய்: Stesen LRT Masjid Jamek; சீனம்: 占美清真寺站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடம்; அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய மூன்று வழித்தடங்களில் அமைந்துள்ள நிலத்தடி; மற்றும் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்; மற்றொன்று புத்ரா அயிட்ட்ஸ் நிலையம் ஆகும்.
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள ஜாமிஃ பள்ளிவாசலின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்ப்ட்டது.[3][4]
Remove ads
பொது
இந்த நிலையம் தற்போது ஓர் இடைமாற்று நிலையம் என்று அழைக்கப்பட்டாலும், 28 நவம்பர் 2011 வரை, செயல்பாட்டு அடிப்படையில் இரண்டு மஸ்ஜித் ஜமெயிக் நிலையங்கள் இருந்தன.
ஒரு நிலையம், ஓர் உயத்தப்பட்ட மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் ஆகும். இந்த நிலையம் அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்களுக்குச் சேவை செய்தது.
பயணச் சீட்டு முகைமைகள்
மற்றும் ஒரு நிலத்தடி நிலையமான மஸ்ஜித் ஜமெயிக் நிலையம்; கிளானா ஜெயா வழித்தடத்திற்குச் சேவை செய்கிறது.
ஒவ்வொன்றும் ஒருங்கிணைக்கப்படாத தனித்தனியான பயணச் சீட்டு முகைமைகளைக் கொண்டிருந்தன.
ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு பயணிகள் மாற விரும்பினால், அவர்கள் ஒரு வழித்தட அமைப்பிலிருந்து வெளியேறி, மற்ற அமைப்பில் நுழைவதற்கு முன், ஒரு புதிய பயணச் சீட்டை வாங்க வேண்டிய நிலை இருந்தது.[5]
தனித்தனி கட்டிடங்கள்
2006-ஆம் ஆண்டுக்கு முன், கிள்ளான் ஆற்றின் மேல் பிளாசா வணிக வளாகம் கட்டப்பட்டது. அப்போது, அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்களுக்கு என தனி ஒரு மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் இருந்தது.
அதே போல கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் தனி ஒரு மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் இருந்தது. அந்த இரு நிலையங்களும் தனித்தனிக் கட்டிடங்களாக இயங்கின.[6]
துன் பேராக் சாலை
அந்தக் கட்டத்தில் இரண்டு நிலையங்களுக்கும் இடையில் குறைந்த அளவிலான பாதசாரி நடைபாதைகள் இருந்தன. இதன் விளைவாகப் பயணிகள் வெயில் மழைக்கு உட்பட வேண்டியிருந்தது.
அத்துட்ன் ஒரு வழித்தடத்தில் இருந்து அடுத்த வழித்தடத்திற்கு மாற வேண்டும் என்றால் அதிலேயும் சிரமங்கள் இருந்தன. வாகன நெரிசல் நிறைந்த துன் பேராக் சாலையைச் சிரமப்பட்டுக் கடக்க வேண்டியிருந்தது.
28 நவம்பர் 2011 அன்று, இரண்டு அமைப்புகளையும் பிரிக்கும் கட்டண வாயில்கள் அகற்றப்பட்டன. அந்த வகையில் இரு நிலையங்களாக இருந்த மஸ்ஜித் ஜமெயிக் நிலையம்; தனி ஒரு நிலையமாக மாற்றம் கண்டது.
Remove ads
செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[7]
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads