கெபிட்டல் சதுக்கம்

கோலாலம்பூர், முன்சி அப்துல்லா சாலையில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பு From Wikipedia, the free encyclopedia

கெபிட்டல் சதுக்கம்map
Remove ads

கெபிட்டல் சதுக்கம் (மலாய்; ஆங்கிலம்: Capital Square அல்லது Cap Square) என்பது மலேசியா, கோலாலம்பூர், முன்சி அப்துல்லா சாலையில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பு; வானளாவி மற்றும் கடைவலக் கட்டிடம் ஆகும்.[3] பண்டார் ராயா மேம்பாடுகள் பெர்காட் நிறுவனத்தால் (Bandar Raya Developments Berhad) உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் கெபிட்டல் சதுக்கம் Capital Square Condominiums Kondominium Capital Square, மாற்றுப் பெயர்கள் ...

சில்லறை விற்பனை கடைகளைத் தவிர, இந்தக் கட்டிடட்த்தில் ஒரு 36-மாடி கூட்டுரிமை குடியிருப்புத் தொகுதி; மற்றும் ஓர் அலுவலகத் தொகுதியும் உள்ளன. மெனாரா பல்நோக்கு (Menara Multi Purpose) என்ற 40 மாடி அலுவலகத் தொகுதியைக் கொண்ட முதல் கட்டம், 1994-இல் கட்டி முடிக்கப்பட்டது.[4] பண்டார் ராயா மேம்பாடுகள் பெர்காட் நிறுவனத்த்தின் தலைமையகம், மெனாரா பல்நோக்கு கட்டிடத் தொகுதியில் உள்ளது.[5]

Remove ads

வரலாறு

1930-களில், தற்போது கேப் சுகேர் (CapSquare) என்று அழைக்கப்படும் இந்த இடம்; ஒரு பொதுப் பூங்காவாகவும், ஈஸ்டர்ன் ஓட்டல் எனும் தங்கும் விடுதியாகவும் இருந்தது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தப் பூங்காவில் பல திரையரங்குகள் உருவாக்கப்பட்டன.[6]

1997 ஆசிய நிதி நெருக்கடி காரணமாக 1997-ஆம் ஆண்டு முதல் கெபிட்டல் சதுக்கத்தின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் கெப்பிட்டல் சதுக்கத்தில் முழுமையாக முடிக்கப்பட்ட ஒரே கட்டமைப்பு மெனாரா பல்நோக்கு கட்டிடம் மட்டுமே ஆகும்.

மெனாரா பல்நோக்கு கட்டிடம்

மெனாரா பல்நோக்கு கட்டிடம் ஏற்கனவே 1994-இல் கட்டி முடிக்கப்பட்டது. ஓரளவு முடிக்கப்பட்ட கட்டமைப்பு சுமார் 10 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.

இருப்பினும் 2008-ஆம் ஆண்டில் கட்டுமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு; 2011-ஆம் ஆண்டில் முடிவடைந்தன. கட்டிடம் கட்டுவதற்கான மொத்தச் செலவு RM 439 மில்லியன் ஆகும்.[7]

Remove ads

அணுகல்

கெப்பிட்டல் சதுக்கத்திற்கு எதிரே முன்சி அப்துல்லா சாலை பேருந்து மையம் உள்ளது. GOKL 01  GOKL 02  GOKL 06  ரேபிட் கேஎல்; SJ பேருந்து; சிலாங்கூர் பேருந்து மற்றும் கோ கேஎல் பேருந்துகள் போன்ற பேருந்துகள் சேவை செய்கின்றன.

குறிப்பு
* பெரும்பாலான அரசு பேருந்துகள் இலவசச் சேவையை வழங்குகின்றன

தொடருந்து நிலையங்கள்

கெப்பிட்டல் சதுக்க வளாகத்திற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads