கெமிஞ்சே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெமிஞ்சே (ஆங்கிலம்: Gemencheh; மலாய்: Gemencheh; என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. சிறிய அளவில் காபியும் இங்கே பயிர் செய்யப்படுகின்றது.
இங்குள்ள மக்கள் பெரும்பாலோர் ரப்பர் மரம் சீவுதல், செம்பனைத் தொழில், கால்நடை வளர்ப்பு, விவசாயம் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
Remove ads
வரலாறு


இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானியப் போர் வீரர்களுக்கும், ஆஸ்திரேலியப் போர்ப் படையினருக்கும் இடையே இங்கு ஒரு கடுமையான சண்டை நடைபெற்றது. அந்தக் கடுமையான மோதலில் பல உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆஸ்திரேலிய வீரர்கள் இறந்து போயினர். [1]
ஆஸ்திரேலியப் படைக்கு லெப்டினண்ட் கர்னல் பிலேக் ஜேக் காலாகன் என்பவர் தலைமை தாங்கினார். கெமிஞ்சே ஆற்றைக் கடக்க கெமிஞ்சே பாலம் பயன்பட்டு வருகின்றது. இந்தக் கெமிஞ்சே பாலம் கிமாஸ் நகரத்தையும் கெமிஞ்சே நகரத்தையும் இணைக்கும் பாலமாகும்.
இரண்டாவது உலகப் போரில் மலாயாவின் மீது (இப்போதைய மலேசியா) படையெடுத்த ஜப்பானியர்கள் வட பகுதியில் இருந்து கீழே சிங்கப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கெமிஞ்சே பாலம்
ஜப்பானியர்களின் கால் பட்ட மலாயாவின் ஒவ்வொரு நகரமும் வீழ்ச்சி அடைந்து வந்தது. ஜப்பானியர்கள் கெமிஞ்சே பாலத்தைக் கடந்து தான் கிமாஸ் நகரத்தை அடைய வேண்டும். தம்பின் நகரில் நுழைந்து விட்ட ஜப்பானியர்கள் கிமாஸ் நகரை அடைய வேண்டும் என்றால் அவர்கள் கெமிஞ்சே ஆற்றைக் கடக்க வேண்டும்.
1942 ஜனவரி மாதம் 14ஆம் தேதி ஆஸ்திரேலியப் படையினர், ஜப்பானியப் படையினரின் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 600லிருந்து 1000 ஜப்பானியர்கள் உயிர் நீத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பிலும் பல உயிருடற் சேதங்கள் ஏற்பட்டன. [2]
இருப்பினும், ஜப்பானியர்கள் அந்தத் தாக்குதலையும் தவிர்த்து கெமிஞ்சே பாலத்தை அடைந்தனர். இந்தக் கட்டத்தில் கெமிஞ்சே பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டது. இரு படையினருக்கும் இடையே சண்டை இரு நாட்கள் நீடித்தன.
ஆஸ்திரேலியப் படை தோல்வி
இறுதியில், ஆஸ்திரேலியப் படையினர் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான்கு நாட்கள் கழித்து பாரிட் சூலோங் எனும் இடத்தில் மேலும் ஒரு மோதல் இடம் பெற்றது. அதில் எஞ்சியிருந்த 81 ஆஸ்திரேலியப் போர் வீரர்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். [3][4]
உயிர்நீத்த ஆஸ்திரேலியப் படையினருக்காக, சண்டை நிகழ்ந்த கெமிஞ்சே ஆற்று ஓரத்தில் ஒரு நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவுத் தூண் இன்றும் உள்ளது. அந்த நினைவுத் தூணுக்கு கிளேமா ஆறு நினைவுச் சின்னம் (Kelamah River Memorial) என்று பெயர் வைத்துள்ளனர். கெமிஞ்சே ஆற்றின் ஒரு துணை ஆற்றின் பெயர் கிளேமா ஆறு என்பதாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads