தம்பின் மாவட்டம்
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தம்பின் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Tampin; ஆங்கிலம்: Tampin District; சீனம்: 淡边县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். தம்பின் மாவட்டத்தின் முக்கிய நகரம் தம்பின் (Tampin) நகரம்.[2]
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது.
Remove ads
பொது
நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா எல்லையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டம், உள்ளாட்சிச் சட்டம் 1976-இன் விதிகள் மூலம் மறு சீரமைக்கப்பட்டது.
அதன் விளைவாக, ஜூலை 1, 1980-இல் தம்பின் மாவட்டக் கழகம் (Tampin District Council) உருவாக்கப்பட்டது. தம்பின் மாவட்டம் முன்பு தம்பின் வாரியம் என்று அழைக்கப்பட்டது.
நிர்வாகப் பகுதிகள்
தம்பின் மாவட்டக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதிகள்:-
- தம்பின் டவுன்
- கிமிஞ்சே நகரம்
- கிமிஞ்சே லாமா
- கிமிஞ்சே பாரு
- பத்தாங் மலாக்கா
- ஆயர் கூனிங் செலாத்தான்
- கெடோக்
- கிம்மாஸ்
தம்பின் முக்கிம்கள்
தம்பின் மாவட்டத்தில் மாவட்டத்தில் 7 முக்கிம்கள் உள்ளன.[3]
- ஆயர் கூனிங் (Ayer Kuning)
- கிம்மாஸ் (Gemas)
- கெமிஞ்சே (Gemencheh)
- கெரு (Keru)
- ரெப்பா (Repah)
- தம்பின் தெங்கா (Tampin Tengah)
- திபோங் (Tebong)
தம்பின் தேர்தல் முடிவுகள்
மலேசிய மக்களவையில் தம்பின் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
மாநிலச் சட்டமன்றம்
தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2023-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]
Remove ads
தம்பின் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; நெகிரி செம்பிலான்; தம்பின் மாவட்டத்தில் (Tampin District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 760 மாணவர்கள் பயில்கிறார்கள். 107 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads