கெலுராக் கல்வெட்டு

பிரம்பானான் கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சைலேந்திரா கல்வெட்டு From Wikipedia, the free encyclopedia

கெலுராக் கல்வெட்டு
Remove ads

கெலுராக் கல்வெட்டு (ஆங்கிலம்: Kelurak Inscription; இந்தோனேசியம்: Prasasti Kelurak) என்பது இந்தோனேசியா, நடுச் சாவகம், கிளாத்தேன் குறுமாநிலம் (Klaten Regency), பிரம்பானான் கோயில், உலும்பாங் கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சைலேந்திரா கல்வெட்டு ஆகும்.

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...

உலும்பாங் கோயில், யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பானான் கோயிலுக்கு சற்று வடக்கே உள்ளது.

இந்தக் கல்வெட்டு கிபி 704 சக ஆண்டு 782-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. தற்போது ஜகார்த்தா, இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ளது; கல்வெட்டு கணக்கெடுப்பு பதிவு எண் D.44. இந்தக் கல்வெட்டு சமசுகிருத மொழியில், நாகரி எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது.

Remove ads

சிறீ சங்கராம தனஞ்சயன்

கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட போது அதில் இருந்த எழுத்துகள் மோசமான நிலையில் காணப்பட்டன. பல பகுதிகள் தெளிவற்ற நிலையிலும்; படிக்க முடியாத அளவிலும் இருந்தன. அதன் விளைவாக, வரலாற்று ஆசிரியர்களால் கல்வெட்டின் சில முக்கிய தகவல்களை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்தது.

மஞ்சுசிறீ சிலையை வைப்பதற்காக ஒரு புனிதமான பௌத்த கட்டிடம் கட்டப்பட்டதை அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் கௌதம புத்தர், தருமம், மற்றும் சங்கம் ஆகிய மூன்றும் பொறிக்கப்பட்டு உள்ளன. அவை பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு இணையான தத்துவ மூலங்களாகும்.

Remove ads

வச்சிரயான பௌத்தம்

இந்தப் புனித கட்டிடத்தைக் கட்ட மன்னர் தரணிந்திரன் கட்டளையிட்டார் என்றும்; அவரின் அரசப் பெயரான சிறீ சங்கராம தனஞ்சயன் (Sri Sanggramadhananjaya) எனும் பெயரும், அந்தக் கல்வெட்டில் பதிவாகி உள்ளன.[1][2]:89 இந்தப் பௌத்த கோயிலில் இந்து கடவுள்களைப் பற்றிய குறிப்பு என்பது வச்சிரயான பௌத்த செல்வாக்கைக் (Tantrayana —Vajrayana Buddhism) குறிக்கின்றது.

மஞ்சுசிறீக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்பது மத்திய ஜாவா சேவு கோயில் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கோயில் பிரம்பானான் கோயிலில் இருந்து வடக்கே வெகு தொலைவில் அமைந்துள்ளது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads