தரணிந்திரன்

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் ஆட்சியாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தரணிந்திரன் அல்லது மாதர இந்திர ராஜா (ஆங்கிலம்: Dharanindra அல்லது King Dharanindra; இந்தோனேசியம்: Indra Raja Mataram; ஜாவானியம்: Indra Utawa Dharanindra) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் ஆட்சியாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் தரணிந்திரன் King Dharanindra Sri Sanggrama Dhananjaya Indra Raja Mataram, சிறீவிஜயம்–மாதரம் அரசர் ...
விரைவான உண்மைகள் சிறீவிஜய அரசர்கள், தொடக்கம் ...

பனங்கரனின் வாரிசான தரணிந்திரன், 775—800-ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில், சிறீ விஜயப் பேரரசை ஆட்சி செய்தார்.[1]

அதே வேளையில் மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தின் அரசராகவும் பொறுப்பு வகித்தார். தரணிந்திரன், சைலேந்திர அரச மரபைச் சேர்ந்தவர் ஆவார்.

Remove ads

வரலாறு

ஒரே காலக்கட்டத்தில், இரு இராச்சியங்களை ஆட்சி செய்த தரணிந்திரன், ஒரு சிறந்த ஆட்சியாளராகவும்; சைலேந்திராவின் வெளிநாட்டுப் படையெடுப்புகளுக்குப் பெருமை சேர்த்தவராகவும் அறியப்படுகிறார். 782-ஆம் ஆண்டு கெலுராக் கல்வெட்டில் (Kelurak inscription) அவரின் ஆட்சிப் பெயரான சிறீ சங்கராம தனஞ்செயன் (Sri Sanggrama Dhananjaya) எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2]:91

கெலுராக் கல்வெட்டில் அவர் வைரவர வீரமர்த்தனன் (Wairiwarawiramardana) அல்லது "துணிச்சலாக எதிரிகளைக் கொன்றவர்" என்றும் புகழப் படுகிறார். தெற்கு தாய்லாந்து மலாய் தீபகற்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லிகோர் பி கல்வெட்டிலும் (Ligor B inscription) சர்வரி மதவிமதன (Sarwwarimadawimathana) எனும் பெயர் காணப்படுகிறது; இந்தப் பெயர் அதே தரணிந்திரனைக் குறிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Remove ads

தாமரலிங்கா

தரணிந்திரன் ஒரு போர்க் குணமிக்க அரசராக அறியப்படுகிறார். அவர் வெளிநாடுகளுக்கு, பல இராணுவக் கடற்படைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். மலாய் தீபகற்பத்தில் சயாமியர் கட்டுப்பாட்டில் இருந்த லீகோர் பகுதியையும் சைலேந்திரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.[3]

லிகோர் என்பது நக்கோன் சி தம்மராத் இராச்சியம் (Nakhon Si Thammarat) (தாய்: อาณาจักรนครศรีธรรมราช) என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 10-ஆம்; 13-ஆம் நூற்றாண்டுகளில் இந்த இராச்சியம் தாமரலிங்கா (Tambralinga) என்று அழைக்கப்பட்டது.[4]

Remove ads

சென்லா

நகர சிறீ தருமராஷ்டிரா (Nagara Sri Dharmarashtra) என்று முன்பு அழைக்கப்பட்ட தாமரலிங்கா இராச்சியம், தற்போது தாய்லாந்தில் ஒரு மாவட்டம் ஆகும். நீர் சென்லா (Water Chenla); கெமர்: ចេនឡាទឹកលិច) எனும் சயாமிய பகுதியில் இருந்து லிகோரைக் கைப்பற்றிய பிறகு தரணிந்திரன், 774; 770-ஆம் ஆண்டுகளில், சம்பா இராச்சியத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கினார்.[5]

பின்னர் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீக்கோங் படுகையில் இருந்த தெற்கு கம்போடியா கைப்பற்றப்பட்டது.

இரண்டாம் செயவர்மன்

அந்தக் காலகட்டத்தில், ஜாவாவைச் சேர்ந்த இரண்டாம் செயவர்மன்[6] (Jayavarman II), சைலேந்திர (சிறீ விஜய) படையின் தளபதியாக இருந்திருக்கலாம்; சிறீவிஜய அரசர் தரணிந்திரனின் ஆணையின் பேரில், இரண்டாம் செயவர்மன் புதிய கம்போடியா மன்னராகப் பதவியேற்று; புதிய அங்கோர் வம்சம் (Angkor Dynasty) நிறுவப்பட்டு இருக்கலாம் என நம்பபடுகிறது.[7]

மன்னர் தரணிந்திரன் தன் முன்னோடி ஆட்சியாளர் பனங்கரனின் கட்டுமான மரபைத் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது. மத்திய ஜாவா மஞ்சு கிரகா கோயிலின் கட்டுமானத்தைத் தொடர்ந்து முடித்தார்.[8]

Remove ads

காராங்தெங்கா கல்வெட்டு

மேலும் காராங்தெங்கா கல்வெட்டின் (Karangtengah inscription) (824 தேதியிட்டது) பதிவுகளின்படி,[9] மத்திய ஜாவா மெண்டுட் கோயில் அல்லது மத்திய ஜாவா நிங்காவென் கோயிலுடன் தொடர்புடைய வேணுவன கோயிலின் (Venuvana temple) கட்டுமானத்திற்கும் பொறுப்பேற்றார்.

போரோபுதூர் மற்றும் மத்திய ஜாவா பாவோன் கோயிலின் கட்டுமானத்திற்கும், தரணிந்திரன் பொறுப்பேற்று இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads