கெவாடியா
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெவாடியா (Kevadia), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா வருவாய் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இவ்வூரில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக நிறுவப்பட்ட ஒற்றுமைக்கான சிலை அமைந்துள்ளது. இவ்வூரில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு 250 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.[1][2] இவ்வூரில் உள்ள கேவாடியா தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை, புது தில்லி, வாரணாசி, ரேவா, சென்னை, அகமதாபாத் மற்றும் வடோதரா (பிரதாப்நகர்) நகரங்களுடன் இணைக்கிறது.[3][4]
Remove ads
அருகில் உள்ள நகரங்கள்
- ராஜ்பிப்லா - 25 கி.மீ.
- பரூச் - 91 கி.மீ.
- வடோதரா - 85 கி.மீ.
- அகமதாபாத் - 193 கி.மீ.
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1585 வீடுகள் கொண்ட கேவாடிய நகரத்தின் மொத்த மக்கள்தொகை 6,788 ஆகும். அதில் ஆண்கள் 3564 மற்றும் பெண்கள் 3224 ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 645 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 905 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.81% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 95.95%, இசுலாமியர் 3.54%, கிறித்தவர் 0.22%, சமணர் 0.22% மற்றும் பிற சமயத்தவர் 0.07% ஆக உள்ளனர்.[5]
Remove ads
சுற்றுலா தலங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads