நர்மதா மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நர்மதா மாவட்டம் (Narmada district) இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இது மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத் தலைமையகம் ராஜ்பிப்லா நகராகும்.[1].



மாவட்டத்தின் பரப்பளவு 2,755 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 5,90,379 . [2] குஜராத்தில் மக்கட்தொகை கொண்ட மாவட்டங்களில் இது மூன்றாவதாகும்.[3]
Remove ads
அமைவிடம்
வடக்கே வதோதரா மாவட்டம், கிழக்கே மகாராஷ்டிர மாநிலம், தெற்கே தபி மாவட்டம், மேற்கே பரூச் மாவட்டம் எல்லைகளாக கொண்டமைந்துள்ளது நர்மதா மாவட்டம்.
வரலாறு
வதோதரா மாவட்டம் மற்றும் பரூச் மாவட்டம் ஆகியவற்றின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் 2 அக்டோபர் 1997இல் உருவானது.[4]
வருவாய் வட்டங்கள்
நர்மதா மாவட்டம் ஐந்து வட்டங்களைக் கொண்டது.[5]
- நாண்டோட்
- சக்பாரா
- டெடியாபாடா
- திலக்வாடா
- கருடேஸ்வர்
பொருளாதாரம்
2006இல் இந்திய நடுவண் அரசின், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்த இந்தியாவின் 640 மாவட்டங்களில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்ட 250 மாவட்டங்களில் நர்மதா மாவட்டமும் ஒன்று.[6]
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 590,379.[3] மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கி.மீட்டருக்கு 214 நபர்கள். பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 73.29%. [3]
சுற்றுலாத் தலங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads