கெவாடியா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெவாடியா தொடருந்து நிலையம் (Kevadia railway station) (நிலைய குறியீடு: KDCY) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா எனும் சிற்றூரில் அமைந்துள்ள சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இது கெவாடியாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3 நடைமேடைகளுடன் அமைந்த இந்த தொடருந்து நிலையம், கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டி, 17 சனவரி 2021 அன்று சுற்றுலாப் பயணிகளின் சேவைகளுக்கு திறக்கப்பட்டது.[1][2] இத்தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை, புது தில்லி, சென்னை, அகமதாபாத், வாரணாசி, வடோதரா, ரேவா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[3][4]
Remove ads
தொடருந்துகள்
- 12927/12928 கெவாடியா - மும்பை - தாதர் அதிவிரைவு வண்டி
- 20903/20904 கெவாடியா - வாரணாசி மகாமானா விரைவு வண்டி
- 20905/20906 கெவாடியா - ரேவா விரைவு வண்டி
- 20919/20920 கெவாடியா - சென்னை சென்டிரல் அதிவிரைவு வண்டி (வாரம் ஒரு முறை)
- 20945/20946 கெவாடியா - தில்லி ஹசரத் நிஜாமுதீன் விரைவு வண்டி
- 20947/20948 கெவாடியா - அகமதாபாத் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- 20949/20950 கெவாடியா - அகமதாபாத் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- 69201/69202 கெவாடியா - வடோதரா (பிரதாப்நகர்)
- 69203/69204 கெவாடியா - வடோதரா (பிரதாப்நகர்)
- 69205/69206 கெவாடியா - வடோதரா (பிரதாப்நகர்)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads