கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
கோலாலம்பூர் சென்ட்ரல்; சுபாங் வானூர்தி நிலையம்; இடையிலான விரைவுத் தொடருந்து வழித்தடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடம் அல்லது கேஎல் சென்ட்ரல்-தெர்மினல் இஸ்கைபார்க் வழித்தடம் (ஆங்கிலம்: KL Sentral–Terminal Skypark Line அல்லது Skypark Link; மலாய்: Laluan KL Sentral - Skypark Terminal அல்லது Laluan Skypark) என்பது மலேசியா, கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் சுபாங் வானூர்தி நிலையம் ஆகிய இரு இடங்களுக்கும் இடையிலான ஒரு விரைவுத் தொடருந்து வழித்தடம் ஆகும். தற்போது இந்த வழித்தடத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres) மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit) ஆகிய இரு சேவைகளுக்குப் பிறகு, கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடம் என்பது மலேசியாவின் இரண்டாவது வானூர்தி நிலையத் தொடருந்து இணைப்புச் சேவை என அறியப்படுகிறது..
Remove ads
பொது
இந்தச் சேவை மலாயா தொடருந்து நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது; மற்றும் கோலாலம்பூர் சென்ட்ரல் - சுபாங் ஜெயா நிலையம் ஆகிய இரு நிலையங்களுக்கும் இடையிலான தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தையும் இந்த கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடம் பகிர்ந்து கொள்கிறது.[1]
இருப்பினும், கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடம்; சுபாங் ஜெயா நிலையத்திற்குப் பிறகு, தனியாகப் பிரிந்து சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் எனும் சுபாங் வானூர்தி நிலையத்தை நோக்கிச் செல்கிறது.
ஒரு குறிப்பிடத்தக்க கூறு என்னெவெனில், தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் ஏனைய தொடருந்துகள் கோலாலம்பூர் சென்ட்ரல் - சுபாங் ஜெயா நிலையம் ஆகிய இரு நிலையங்களுக்கும் இடையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்கின்றன. அதே வேளையில் கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடத்தின் தொடருந்துகள் அந்த நிலையங்களில் நிற்பதில்லை.[2]
Remove ads
கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி
இந்த கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடத்தில் முன்பு சேவையில் இருந்த எல்லா தொடருந்துகளும், தற்போது கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதியின் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.[3] சுபாங் ஜெயா நிலையம் மற்றும் தெர்மினல் இஸ்கைபார்க் நிலையம் ஆகிய இரு நிலையங்களுக்கும் இடையே புதிதாக இரண்டு நிலையங்கள் கட்டப்படுவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனாலும் தற்போது வரையில் கட்டப்படவில்லை.
இந்த வழித்தடம் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) கீழ் ஒரு பகுதியாகும். போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடம் 10 என பழுப்பு நிறத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது.


Remove ads
சுபாங் விவானூர்தி நிலைய முனையம்
கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடத்தில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை காரணமாக 15 பிப்ரவரி 2023 முதல் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டன. கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடச் சேவையை இயக்குவதற்கான நிதி மைரெயில் லிப் (MyRailLife) எனும் வேறு ஒரு திட்டத்திற்கு மறுஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் புதியத் திட்டத்தின் வழி, மாணவர்களும் மாற்றுத்திறனாளிகளும் இலவசமாக சவாரி செய்யலாம்.[4]
சுபாங் வானூர்தி நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தின் (Subang Airport Regeneration Plan) கீழ்; சுபாங் வானூர்தி நிலைய முனையத்தின் மறுசீரமைப்பு முடிந்தவுடன் மட்டுமே கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் வழித்தடத்தின் சேவைகள் புதிய தோற்றத்தில் மீண்டும் தொடங்கப்படும்.[5]
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
கேஎல்ஐஏ போக்குவரத்து
கோலாலம்பூர் மோனோரெயில்
காஜாங் வழித்தடம்
கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
சா ஆலாம் வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம்
எம்ஆர்டி சுற்று வழித்தடம்
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
Remove ads
வரைபடம்
மேலும் காண்க
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads