தீபகற்ப மலேசியா

From Wikipedia, the free encyclopedia

தீபகற்ப மலேசியாmap
Remove ads

4°0′N 102°30′E

Thumb
தீபகற்ப மலேசியாவின் செயற்க்கோள் புகைப்படம்
Thumb
மலேசியத் தீபகற்பம்

தீபகற்ப மலேசியா (Peninsular Malaysia; மலாய்: Semenanjung Malaysia); என்பது மலேசியாவின் மேற்கு நிலப் பகுதியைக் குறிப்பதாகும். மலேசியாவின் இன்னொரு பகுதியான, சபா, சரவாக் பகுதிகளைக் கொண்ட கிழக்கு மலேசியா என்பது இந்தோனேசியத் தீவின் ஒரு பகுதியாகும்.

இது மலேசிய மூவலந் தீவில் இருந்து தென்சீனக் கடலால் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலப்பகுதி. முன்னர் மலாயா, என்பது மலாயா தீபகற்பத்தில் (மலேசிய மூவலந்தீவில்) அமைந்திருக்கிறது.

தீபகற்ப மலேசியா மலேசியாவின் ஒரு பகுதியாகும். தீபகற்ப மலேசியா மேற்கு மலேசியா (Malaysia Barat) அல்லது மலாயா மாநிலங்கள் (Negeri-negeri Tanah Melayu) என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]

இதன் பரப்பளவு 131,598 சதுர கி.மீ. (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே தாய்லாந்து நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே சிங்கப்பூர் உள்ளது. மேற்கே மலாக்கா நீரிணைக்கு மறுகரையில் சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. கிழக்கே தெற்கு சீனக் கடலுக்கு மறுகரையில் கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) உள்ளது.[3] இது ஏறத்தாழ 21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

Remove ads

மாநிலங்களும் பிரதேசங்களும்

Thumb
தீபகற்ப மலேசியா

தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும், இரண்டு நடுவண் பிரதேசங்களும் அமைந்துள்ளன:

மக்கள் பரம்பல்



<div class="transborder" style="position:absolute;width:100px;line-height:0;

Thumb

தீபகற்ப மலேசியாவின் இனப் பரம்பல் (2017)

  மலாய்க்காரர் (64.3%)
  சீனர் (25.1%)
  இந்தியர் (9.0%)
  பழங்குடியினர் (அசுலினர்) / வேறு ({{{value4}}}%)
  ஏனையோர் (1.1%)
மேலதிகத் தகவல்கள் சமயம் (2017 கணக்கெடுப்பு) ...

தீபகற்ப மலேசியாவின் பெரும்பான்மையான மக்கள் மலாய் மக்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் முசுலிம்கள் ஆவர்.[5] கணிசமான அளவில் சீனர், இந்தியர் மக்களும் வாழ்கின்றனர்.

இப்பகுதியின் மரபுவழி மகக்ள் மலேசியப் பழங்குடியினர் ஆவர். கிட்டத்தட்ட 140,000 பழங்குடியினர். பெரும்பாலும் மலாயா தீபகற்பத்தின் உட்பகுதிகளில் வாழ்கின்றனர்.

Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads