கேரள மண் அருங்காட்சியகம்

கேரள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேரள மண் அருங்காட்சியகம் (Kerala Soil Museum) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தின் பரோட்டுகோணத்தில் உள்ள மத்திய மண் பகுப்பாய்வு ஆய்வகத்தின் வளாகத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வகையான மண் காட்சிகள் உள்ளன. இது கேரள அரசின் மண் ஆய்வு மற்றும் பாதுகாப்புத் துறையால் அமைக்கப்பட்டது. இது 2014 சனவரி முதல் நாள் அன்று திறக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய மண் அருங்காட்சியகமும், சர்வதேச தரத்திற்கு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மண் அருங்காட்சியகம் என்றும் கூறப்படுகிறது.[1]

Remove ads

வரலாறு

கேரளத்தின் மண் மற்றும் கனிம வளங்களின் செழுமையைக் காட்டுவதற்காக இந்த மண் அருங்காட்சியகத்தை மாநில அரசு நிறுவியதுடன், மண் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.[2] அருங்காட்சியகத்தின் ஊழியர்களுக்கு நெதர்லாந்தின் வாகனிங்கன் பல்கலைக்கழகத்தில் உள்ள உலக மண் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள் பயிற்சி அளித்தனர் .[3]

காட்சியகங்கள்

இந்த அருங்காட்சியகத்தில் மிக முக்கியமான காட்சியகங்களில் 1.5 மீட்டர் உயரமுள்ள 82 மண் ஒற்றைக்கூறுகளின் தொகுப்பாகும், அவை கேரள மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட 82 மண் தொடர்களின் அப்படியே மண்ணடுக்குத் தோற்றத்தைப் பாதுகாத்து காட்சிப்படுத்துகின்றன.[4] ஒவ்வொரு ஒற்றைக்கூறும் அதன் உறுப்புகளுக்கு இடையூறு விளைவிக்காமல் தரையில் இருந்து தோண்டப்பட்டு அருங்காட்சியக காட்சியகத்தில் வைக்கபடுவதற்கு முன்பு ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் செயல்முறைக்கப்பட்டது. ஒவ்வொரு ஒற்றைக்கூறுகள், மண் தொடரின் இயற்பியல் பண்புகள், அது காணப்படும் இடம், அதன் ஊட்டச்சத்து நிலை, அதற்கு மிகவும் பொருந்திவரக்கூடியப் பயிர்கள், நிலத்தின் உள்ள மண்ணை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்குமான பரிந்துரைகள் உள்ளிட்ட மண் பற்றிய தகவல்கள் உள்ளன.[3] அருங்காட்சியகத்தில் காட்டப்படும் மண் வகைப்பாடுகள் அமெரிக்க வேளாண்மைத் துறை மண் வகைபிரிப்பை அடிப்படையாகக் கொண்டது.

அருங்காட்சியகத்தின் பிற காட்சியகங்களில் கேரளத்தின் புவியுரு வரைபடமும் அடங்கும்; மாநிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு மண் வரிசைகளின் பரவலைக் காட்டும் கேரள வரைபடம்; பாறைகள், தாதுக்கள், களிமண், கரம்பை, மணல், கல், சரளை போன்ற மண்ணின் இயற்பியல் கூறுகள் ; மண் எவ்வாறு உருவாகிறது என்பதை விளக்கும் காட்சிகள்; மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மண்ணின் உறவு பற்றிய காட்சிகள் போன்றவை உள்ளன.[4]

அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்ட மண் தகவல் மையம் உள்ளது. இது வடிநிங்களின் மாதிரியைக் காட்சிப்படுத்துகிறது. மேலும் இது வடிநித்தின் கூறுகள் மற்றும் பலவிதமான மண் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை விளக்குகிறது.[4]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads