கேளையாடு
ஒரு பாலூட்டி விலங்கு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேளையாடு[3] (Muntjacதென்னிந்தியாவில் வாழும் இந்த மான்களுக்கு கரட்டாடு என்றும் வட இந்தியாவில் வாழுபவற்றிற்கு கக்கர் என்ற பெயரும் உண்டு.[4]) என்பது தென் ஆசியாவை தாயகமாகக் கொண்ட சிறுமான் ஆகும். இவை இந்தியாவிலும், மலாய் நாட்டிலும் பரவலாகக் காணப்படுகி்ன்றன. இந்தியாவில் 5000 - 6000 அடி உயரம் உள்ள பகுதிகளில் காணப்பபடுகின்றன. மண்டியாகஸ் ம.வெஜைனாவிஸ் வட இந்தியாவிலும், மண்டியாகஸ் ம.ஆரியஸ் சிறப்பினம் தென் இந்தியாவிலும் பரவியுள்ளன.
ஆண்மான்கள் பழுப்பு நிறமுறடையவை, மேல் தாடைக் கோரைப்பற்கள் நன்கு வளர்ந்து தற்காப்பு ஆயுதமாக பயன்படுகின்றன. சிறிய குட்டையான நெற்றிக்கிளை மற்றும் கிளையற்ற நடுத்தண்டையும் கொண்டுள்ள கொம்புகள், மயிர் சூழ்ந்த எலும்புக் காம்புகள் மேல் அமைந்துள்ளன. இம்மான் விலா முகத்துடைய மான் என்றும் பெயர் பெற்றுள்ளது. உயரம் 20-3- அங்குலம் எடை 48-50 பவுண்டுகள் உடையன.
பெண்மான்களில் கொம்புகள் இல்லை. அதற்குப் பதிலாக தடித்த மயிர்க்கற்றை உள்ளது. இம்மான்களில் குளிர் காலங்களில் முக்கியமாக இனப்பெருக்கம் நடைபெறுகிறது. வழக்கமாக 1 குட்டியையும், சில சமயங்களில் இரண்டு குட்டிகளையும் ஈனுகின்றன.
பல்வேறு இலைகள், புற்கள், காட்டுப்பழங்களை இம்மான்கள் உணவாகக் கொள்கின்றன.
தொலைவிலிருந்து கூக்குரலிடும்போது நாய் குரைப்பதுபோல இருப்பதால் குரைக்கும் மான்கள் என்ற பெயர் ஏற்பட்டது. வழக்கமாக் காலை, மாலை நேரங்களிலும் சில சமயம் இருட்டிய பின்னரும் விட்டுவிட்டுக் கத்தும். பொதுவாக இவற்றின் கூச்சல் புலி அருகில் இருப்பதை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads