கேள்விக்குறி (திரைப்படம்)
2007 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேள்விக்குறி (Kelvikuri) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். ஜெய்லானி இயக்கிய இப்படத்தில் ஜெயலானி, சோனா ஹைடன், பிரீத்தி வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் கரிகலன், சிசர் மனோகர், சம்பத் ராம், முதல்வன் மகேந்திரன், விஜி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி. சத்ய பிரசாத் இசை அமைத்துள்ளளார். படமானது 30 நவம்பர் 2007 அன்று வெளியானது.[1]
Remove ads
நடிகர்கள்
- ஜெய்லானி பாலாவாக
- சோனா ஹைடன் திவ்யாவாக
- பிரீத்தி வர்மா மாயாவாக
- கரிகாலன் ஏசி கரிகாலனாக
- சிசர் மனோகர் கஞ்சா சாமியாக
- சம்பத் ராம் காவல் ஆய்வாளர் இராஜேந்திரனாக
- முதல்வன் மகேந்திரன் ஆணையாளர் திருநாவக்கரசாக
- விஜி சாலினியாக
- சேத் கோவிந்தன் கோவிந்தனாக
- ராஜி காவல் துணை ஆய்வாளர் பானுமதியாக
- சிட்டிசன் சிவகுமார் திருநாவுக்கரசுவின் தந்தையாக
- வின்செண்ட் ஆல்பார்ட் டாக்டர் நாராயணமூர்த்தியாக
- மதுரை ஜோசப் காவலர் பரமசிவமாக
- பாஸ்கர் காவலர் சேதுராமனாக
- கோகுல்ராஜ் அமைச்சசராக
- பரதீப் குமார் தலைமைக் காவலர் ராஜுவாக
- கிரிஜா பெண் காவலராக
Remove ads
தயாரிப்பு
ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிந்த ஜெய்லானி, கேள்விகுறி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை அவர் கே. மணிகண்டனுடன் இணைந்து தயாரித்தார்.
படத்தில் ஜெய்லானி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார், நடிகை சோனா ஹைடன் கதாநாயகியாக அறிமுகமானார். பிரீத்தி வர்மா இரண்டாவது கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.[2][3]
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஜி. சத்ய பிரசாத் அமைத்தார். இசைப்பதிவில் இரண்டு பாடல்கள் உள்ளன.
பழனிபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
வெளியீடு
இந்த படம் 30 நவம்பர் 2007 அன்று நான்கு படங்களுடன் வெளியிடப்பட்டது.[6]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads