கரிகாலன் (நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரிகாலன் (பிறப்பு: வளவன் சற்குணம்) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சோலையம்மா, வைரவன், அரவான் போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

முன்வாழ்க்கை

இவர் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில் உள்ள கள்ளிக்குளம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பள்ளி ஆசிரியர்களாவர். இளம் வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் மிக்கவராக இவர் இருந்துள்ளார். பலதொழில்நுட்பப் பயிலகத்தில் பயின்ற இவர், பின்னர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் இணைந்து படித்தார். படிப்பை முடித்த பிறகு படவாய்ப்புகளைத் தேடத் துவங்கினார். வையாபுரி இவரது அறைத் தோழர் ஆவார்.[1]

Remove ads

தொழில் வாழ்க்கை

முதன் முதலில் இவருக்கு நாடோடித் தென்றல் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் இவரைக் கொண்டு சில காட்சிகளும் எடுக்கபட்டன. ஆனால் சில காரணங்களினால் இவருகு பதிலாக பாண்டியன் மாற்றபட்டார். பின்னர் சோலையம்மா படத்தில் எதிமறை பாத்திரத்தில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதன்பிறகு தெலுங்கு தமிழ் என 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மனைவணிகத்தில் ஈடுபட்டதால் திரைப்படங்களில் தன் கவனத்தைக் குறைத்துக் கொண்டார்.[2]

Remove ads

தேர்ந்தெடுத்த திரைப்படவியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads