கே. என். தீட்சித்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காசிநாத் நாராயணன் தீட்சித் (Kashinath Narayan Dikshit) (21 அக்டோபர் 1889 12 ஆகஸ்டு 1946) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 21 மார்ச் 1937 முதல் 1944-ஆம் ஆண்டு வரை (மோர்டிமர் வீலருக்கு முன்னர்) பணியாற்றியவர். தற்கால மகாராட்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், பண்டரிபுரம் ஊரில் பிராமணர் குடும்பத்தில் பிறந்த தீட்சித், இந்தியத் தொல்லியல் ஆய்வ்கத்தில் சேரும் முன்னர் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கல்வெட்டியல் துறையின் துணை இயக்குநர் பதவி உயர்த்தப்பட்டார். இவர் 1937-இல் சிந்துவெளி நாகரிகத்தின் மொகஞ்சதாரோ தொல்லியல் களத்தில் ஜான் மார்சலுடன் பணியாற்றினார். 1937-இல் தீட்சித் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநரானார். இவர் 1940-1944-ஆம் ஆண்டுகளில் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் அகிச்சத்ரா தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தார். 1944-இல் பணி ஓய்வு பெற்ற பின்னர் இப்பணியை மோர்டிமர் வீலர் முடித்தார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads