அகிச்சத்ரா
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகிச்சத்ரா (Ahichchhatra) என்பது முற்காலத்தில் வட பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்தது. கி.பி. 10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறை இயக்குநர் கே. என். தீட்சித் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கிமு. 3-வது நுற்றாண்டிலிருந்து கிபி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளமாக இருந்தது தெரியவந்தது. இங்கு கிமு முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷானர் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுடுமண் தெய்வ உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகிய முக்கியமான பொருட்கள் கண்டறியப்பட்டன.[2]

Remove ads
அகிச்சத்ராவின் முத்திரைகள் & சிற்பங்கள்
- பாஞ்சாலர்களின் நாணயம் (கிமு 75-50)
வஜ்ராயுதம் தாங்கிய இந்திரனின் உருவம் மற்றும் மன்னர் இந்திரமித்திரனின் முத்திரை - மன்னர் இந்திரமித்திரனின் வெண்கல எடைக்கற்கள்
- குசானப் பேரரசு காலத்திய புத்தர் கற்சிற்பம், கிபி 1-ஆம் நூற்றாண்டு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads