கே. செல்வராஜ்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவை செல்வராஜ் என்கிற கி. செல்வராஜ் (இறப்பு: 8. நவம்பர். 2024) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் தி.மு.கவின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக இருந்தார்.[2]

விரைவான உண்மைகள் கே. செல்வராஜ், தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ...

செல்வராஜ் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர். முதலில் அ.தி.மு.கவில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய செல்வராஜ், 1984 இல் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.[3] 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் காங்கிரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினராக மாறி, அதிமுகவின் ஆதரவாளராக செயல்பட்டார். 2006 இல் சேவாதள அமைப்பின் தலைவராக இருந்தார். காங்கிரசு-திமுக கூட்டணியை விமர்சித்த காரணத்தால் 2015 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் செல்வராஜ் அ.தி.மு.கவில் இணைந்தார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த செல்வராஜ், அதிமுகவை விட்டு வெளியேறி 2022 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதன்பிறகு தி.மு.கவின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக இருந்தார்.

Remove ads

குடும்பம்

செல்வராஜுக்கு கமலாமணி என்ற மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். திருப்பதியில் இவரது மூன்றாவது மகனின் திருமணத்தை முடித்துவிட்டு ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 2024 நவம்பர் 8 அன்று தன் 66 வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads