கே. வி. பிரசாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. வி. பிரசாத் என்பவர் கேரளாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.
இசைப் பயிற்சி
பிரசாத் மிருதங்க இசைப் பயிற்சியினை நாராயண ஐயரிடம் 3 ஆண்டுகாலம் பெற்றார். பின்னர் பரசலா ரவியிடம் கற்றார். பிரபல மிருதங்கக் கலைஞர் டி. கே. மூர்த்தியிடமும் பயிற்சி பெற்றுள்ளார். வாய்ப்பாட்டுக்குரிய பயிற்சியினை ஒட்டப்பள்ளம் மகாதேவ ஐயரிடம் 12 ஆண்டுகாலத்திற்கு பெற்றார்.
இசைப் பணி
- எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் ஏறத்தாழ 15 ஆண்டுகாலத்திற்கு பிரசாத் மிருதங்கம் வாசித்துள்ளார்.
- செம்மங்குடி சீனிவாச ஐயர், டி. கே. ஜெயராமன், நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, டி. பிருந்தா – டி. முக்தா சகோதரிகள், வீணை எஸ். பாலசந்தர், எம். எல். வசந்தகுமாரி, லால்குடி ஜெயராமன், மேண்டலின் யு. ஸ்ரீநிவாஸ் ஆகிய இசைக் கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்துள்ளார்.
- எம். பாலமுரளிகிருஷ்ணா, என். ரமணி, டி. வீ. சங்கரநாராயணன், டி. என். சேசகோபாலன், கே. ஜே. யேசுதாஸ், கத்ரி கோபால்நாத் உள்ளிட்ட பிரபல இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து வருகிறார்.
Remove ads
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 2012; வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி[1]
- தமிழக அரசின் கலைமாமணி விருது
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads