லால்குடி ஜெயராமன்
கருநாடக இசை அறிஞர்/இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்[1]
Remove ads
இசைப் பயிற்சி
இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.
இசை வாழ்க்கை
ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:
- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
- செம்பை வைத்தியநாத பாகவதர்
- செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்
- ஜி. என். பாலசுப்பிரமணியம்
- மதுரை மணி ஐயர்
- ஆலத்தூர் சகோதரர்கள்
- கே. வீ. நாராயணசுவாமி
- மகாராஜபுரம் சந்தானம்
- டி. கே. ஜெயராமன்
- மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
- டி. வி. சங்கரநாராயணன்
- டி. என். சேஷகோபாலன்
புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் இலால்குடி ஜெயராமன்.
மாணவர்கள்
இயற்றியுள்ள பாடல்கள்
- இன்னும் என் மனம்... - இராகம்: சாருகேசி
Remove ads
மறைவு
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.[3]
விருதுகளும் சிறப்புகளும்
- பத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- வாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்
- சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்
- மாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்
- சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்
- இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
- பத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads