கொங்கண் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொங்கண் (மராத்தி: कोकण), அல்லது கொங்கண் கடற்கரை அல்லது கரவாலி, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும், அரபுக் கடலுக்கும் இடைப்பட்ட, வடக்கிலிருந்து தெற்கே 530 கி.மீ.. (330 மைல்) நீண்ட வளமான கடற்கரை மற்றும் மலைப் பகுதியாகும். கொங்கண் வாழ் மக்கள் கொங்கணிகள்என அழைக்கப்படுகின்றனர். மொழி கொங்கணி மொழியாகும். கொங்கண் மண்டலத்தின் கொங்கண் இரயில்வே புகழ்பெற்றது.



இந்தியாவின் மேற்கு கடலோரம் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கரிலிருந்து கர்நாடக மாநிலத்தின் மங்களூர் வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும்.[1]
கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் ராய்கர், தாணே, மும்பை, ரத்னகிரி மாவட்டம், சிந்துதுர்க் மாவட்டங்களையும், கோவா மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் வட கன்னட மாவட்டம், தெற்கு கன்னட மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டங்களையும் குறிக்கும்.
இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (நெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம்.
Remove ads
சில புள்ளிவிவரங்கள்
- பரப்பளவு: 30,746 கி.மீ..²
- மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு): 24,807,357
- மாவட்டங்கள்: மும்பை, மும்பை புறநகர், தாணே, இராய்கர், இரத்னகிரி, சிந்துதுர்க்
- படிப்பறிவு: 81.36%
- பாசன பரப்பு: 4,384.54 கி.மீ..²
- முக்கிய பயிர்: அல்போன்சா மாம்பழம்
வரலாறு
இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:
- முந்தைய இரத்னகிரி மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய சிந்துதுர்க் மாவட்டம் உருவானது.
- கோலாபா என அழைக்கப்பட்ட மாவட்டப் பெயரை இராய்கர் மாவட்டம் என மாற்றியது.
- தற்போதைய சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு பந்தர்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
- தற்போதைய தாணே மாவட்டத்திலிருந்து பழங்குடியினர் மிகுந்த சில பகுதிகளைப் பிரித்து புதிய ஜவ்கர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
Remove ads
புகழ் பெற்ற இடங்கள்
மேற்கோள்கள்
மேலும் அறிய
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads